அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள் 57-0421E 1.பரிசுத்த லூக்காவினுடைய சுவிசேஷத்தில், 24-ம் அதிகாரம் முப்பதாம்…துவங்கி 31-ம் வசனம், இல்லை 24-ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் என்று நான் கூறுகிறேன். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, 2 கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதத்தை கூட்டுவாராக. என்னுடைய பாடப்பொருளை இன்றிரவு நான் அழைத்தால், அது இவ்வாறு இருக்கும்: அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள். இப்பொழுது இது உஷ்ணமாக உள்ளது, ஆனால் ஒரு சில நிமிடங்கள், உங்களால் முடிந்தளவு பொறுமையாக நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மேலும் நானும் துரிதமாக முடிக்க முயற்சிப்பேன். ஆனால் இப்பொழுது நாம் வார்த்தையை, தேவனுடைய அற்புதமான வார்த்தையை பயபக்தியுடன் நோக்கிப் பார்க்க விரும்புகிறோம். மேலும் தேவன், ஏதோ ஒரு வழியில், இன்றிரவு நம்முடைய கண்களை திறக்க வேண்டும் என்று நாம் ஜெபித்துக்கொண்டிருக்கிறோம். 3 ஈஸ்டர் ஒரு சரித்திர நிகழ்வின் கொண்டாட்டமாக இருந்தால், அதுமட்டுமாக இருந்தால், அப்பொழுது நாம் சந்தேகிப்பதற்கு ஒரு சிறு காரணம் உண்டு, நாம் சந்தேகிப்பதற்கு ஒரு சிறு காரணம் உண்டு, ஏனென்றால் வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் பயபக்தியான சிந்தனையின் பேரில் அது விடப்படும். கிறிஸ்து அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றாதிருந்திருந்தால், அப்பொழுது நாமும் கூட, நாம் பெற்றுக் கொண்டதற்கான அடையாளத்தை பெற்றிருந்திருக்க மாட்டோம். 4 ஆனால் நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தர், அவர் பூமியின் மீது இருந்தபோது, “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது” என்று கூறினார். இப்பொழுது அங்கே உலகம் என்ற அந்த வார்த்தை, “உலக ஒழுங்கு என்பதிலிருந்து வருகிறது, பூமிக்குரிய ஜனங்கள்.” “இனி உலகம் என்னைக் காணாது. அதே சமயத்தில் நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்.” இப்பொழுது அந்த வார்த்தைகள், இந்த வாரத்தினூடாக, வேதாகமத்திலிருந்து நாம் பேசி யிருக்கிற மற்றெந்த வார்த்தைகளையும் போன்று அவ்வளவு உண்மையுள்ளதாயிருக்கின்றன, வேதாகமத்தில் உள்ள மற்றெந்த வார்த்தைகளையும் போல அவ்வளவு உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. அவர்களுக்கு அவர்களுடைய கண்கள் ஒருபோதும் திறக்கப்படாது.” தேவனுடைய சித்தமில்லாமல் இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஜனங்கள் உண்டு, ஆனால் அவர் இன்றிரவு இங்கே நின்றுகொண்டு உங்களிடத்தில் பேசிக்கொண்டிருப்பாரானால் அவர்களுடைய சொந்த சுயநல விருப்பத்தினால் அவரை விசுவாசிக்கமாட்டார்கள். இது கூறுவதற்கு வருத்தமாக உள்ளது, ஆனால் வேதம், “அவர்கள் இந்த உலகத்தில், இந்த ஆக்கினைத் தீர்ப்புக்கென்றே பிறந்தனர்” என்று கூறியுள்ளது. யூதா, கிட்டத்தட்ட 3-வது வசனம். 5 இப்பொழுது, ஆனால் இன்றிரவு, வெளியே வந்து அறையில் சுற்றிலும் நிற்கிற, இந்த விதமாக ஒரு சிறிய உஷ்ணமான கட்டிடத்தில் ஒன்று சேர்ந்து நெருக்கமாக நிற்கிற நீங்கள், காணப்பட வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் வரவில்லை. நீங்கள் ஒரு நோக்கத்திற்காக வந்திருக்கிறீர்கள். மேலும், என்னுடைய கருத்துப்படி, தேவனோடு நெருங்கி சஞ்சரிப்பதற்காகவே, நீங்கள் உங்களுடைய இருதயத்தின் உத்தமத்தோடு, நீங்கள் உள்ளே வந்தபோது இருந்ததைவிட, ஒரு மேலான நபராக இங்கிருந்து புறப்பட்டு செல்லவே வந்திருக்கிறீர்கள். இன்றிரவு, நான் வாசலில் நுழைந்தபோது அதைத்தான் ஜெபித்தேன், “கர்த்தாவே, நான் உள்ளே செல்லும்போது நான் இருப்பதைக் காட்டிலும், நான் வெளியே வரும்போது ஒரு மேலான நபராக என்னை உருவாக்கும்” என்பதேயாகும். இப்பொழுது அவர்… 6 அவர் போவதற்கு முன்பே, அவர் இந்தவிதமான செய்திகளைக் கூறினார். அவர், “என்னை விசுவாசிக்கிறவன்…” என்று கூறினார். பரிசுத்த யோவான், 14-ம் அதிகாரம், 7-ம் வசனம். “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன்; நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். நான் போவேன், திரும்பி வருவேன்.” 7 இப்பொழுது அவர் செய்த கிரியைகளை நாம் காண்போம். அவர் செய்த கிரியைகளா? அவர் ஒரு மகத்தான நபராக இருந்ததாக உரிமைக்கோரவில்லை, அவர் ஒரு தாழ்மையான மனிதனாயிருந்தார். அவர் எந்த உயரிய சொல்லகராதியைக் கொண்டும் பேசவில்லை, அவர் ஒரு சாதாரண மனிதனாகப் பேசினார். அவர் ஏழைகளுக்கு மத்தியில் ஜீவித்தார், “நரிகளுக்கு குழிகளும், பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தன, ஆனால் அவருக்கோ தலைசாய்க்க இடம் இல்லாதி ருந்தது.” அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த, ஒரு வஸ்திரத்தையே அவர் உடையவராயிருந்தார், “அது ஒரு தையலுமில்லாமல், முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.” 8 அதனால்தான் அவர்கள் அதற்காக சூதாடினார்கள். அது ஏன் அவ்வாறாயிருந்தது? ஏனென்றால் “அவர்கள் வஸ்திரங்களை பங்கிட்டு, என்னுடைய உடையின் பேரில் சீட்டு போட்டார்கள்” என்ற பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தது. ஆகையால் அவர்களால் அதை தையலால் பிரிக்க முடியவில்லை, எனவே அதற்காக அவர்கள் சூதாட வேண்டியதாயிருந்தது, மேலும் அது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. 9 ஆனால் இன்னும் ஒரு சில நிமிடங்களில், நாம் கவனிப்போம், அவர் என்ன செய்தார்? மேலும் இன்றிரவில், இயேசு கிறிஸ்துவை காணும்படி, வயோதிகரிலிருந்து சிறியவர் வரை, இன்றிரவு, நம் ஒவ்வொருவருடைய இருதயங்களின் பசியும் அதுதான் என்று நான் நினைக்கிறேன். அதுவே என்னுடைய இதயத்தின் வாஞ்சையாய் உள்ளது. அது ஏன் அவ்வாறு உள்ளது? நாம் வேத வாக்கியங்களின் மூலமாக உரிமை கோருவோமானால்… 10 வானொலிகள் இன்றைக்கு அதை முழங்குகின்றன, தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து, “அவர் இங்கு இல்லை, ஆனால் அவர் உயிர்த்தெழுந்துவிட்டாரே!” என்று நாடகங்களில் கூறியுள்ளன. 11 பாருங்கள், அப்படியானால், அவர் உயிர்த்தெழுள்ளாரென்றால், வேதம் எபிரெயர் 13:8-ல், “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. இப்பொழுது, சபையோரே, அதுதான் இங்கே உள்ளது. அது உண்மையாயிருக்க வேண்டும் அல்லது அது உண்மையாயில்லாதிருக்க வேண்டும். அதாவது, அது உண்மையாயில்லாதிருந்தால், அப்பொழுது வேதாகமம் பொய்யாயிருக்கிறது, அப்பொழுது அந்த வார்த்தைகள் பொய்யாயிருக்கின்றன; அப்படியானால் நாம் இழக்கப்பட்டிருக்கிறோம், மரித்தோரின் உயிர்த்தெழுதலே இல்லை, மேலும் நாம் பாவனையாக விசுவாசிக்கிறோம். ஆனால் அது சத்தியமாயிருந்தால், அப்பொழுது அதுதானே ரூபகாரப்படுத்தப்பட வேண்டும். 12 இந்தத் தண்ணீர் ஈரமானது என்று நீங்கள் கூறினால்; நான் இதற்கு முன்பு தண்ணீரை ஒருபோதும் கண்டதே இல்லை. நீங்கள் அதை என்மேல் ஊற்றினால், அது ஈரமாயில்லாதிருந்தால், அப்பொழுது உங்களுடைய—உங்களுடைய வார்த்தைகள் உண்மையற்றவைகளாய் இருக்கின்றன. ஆனால் நீங்கள் அதை என்மேல் ஊற்றினால், அது ஈரமாயிருந்தால், அப்பொழுது உங்களுடைய வார்த்தைகள் உண்மையாயிருக்கின்றன. 13 கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால், அப்பொழுது வேதம் உண்மையானதாய் இருக்கிறது. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கவில்லையென்றால், அப்போது அது உண்மையானதல்ல. தேவனுடைய வார்த்தைகள் உண்மையாயிருக்கவில்லை யென்றால், அப்போது கிறிஸ்துவும் உண்மை அல்ல, அப்படியானால் தேவனுடைய வார்த்தைகள் உண்மையாயில்லையென்றால், தேவனும் உண்மை இல்லை. ஆனால், அப்படியானால், தேவனுடைய வார்த்தை உண்மையாயிருந்தால், அப்பொழுது வேதம் உண்மையாக இருக்கிறது, தேவன் உண்மையானவராய் இருக்கிறார், கிறிஸ்துவும், உண்மையானவராயிருக்கிறார், மேலும் நாம் அந்த காரணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். சரியே! 14 இப்பொழுது அவர் பூமியின் மேலிருந்தபோது, மகத்தான சுகமளிப்பவராக இருந்ததாக உரிமைக்கோரவில்லை. தேவனுடைய குமாரன் ஒரு சுகமளிப்பவராக இருந்ததாக ஒருபோதும் உரிமைக்கோரவில்லை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] முற்றிலும் சரியே. அவர், “நானாக ஒன்றையும் செய்ய முடியாது, ஆனால் பிதாவானவர் செய்கிறதையே நான் காண்கிறேன். கிரியைகளை செய்கிறது நான் அல்ல,” என்றார். அவர், “அது எனக்குள் வாசமாயிருக்கிற பிதாவானவராயுள்ளது. அவரே அந்தக் கிரியைகளைச் செய்கிறார்” என்றார். அவர் எந்தவிதமான கிரியைகளைச் செய்தார்? 15 பிலிப்பு என்னும் பெயர் கொண்ட ஒரு நபர் அங்கே இரட்சிக்கப்பட்டான் என்று, நாம் வேதத்தில் கண்டறிகிறோம். மேலும் அவன் புறப்பட்டு சென்று, நாத்தான்வேல் என்ற ஒரு சிநேகிதனைக் கண்டான்; அது மலையைச் சுற்றிலும், முப்பது மைல் தூரமாயிருந்து. அவன் இவனை இயேசுவினிடத்தில் திரும்பக் கொண்டு வந்தான். அவன் இவனைக் கண்டபோது, அவன் ஒரு மரத்தின் கீழே, ஜெபித்துக்கொண்டிருந்தான். மேலும் அவன், “நாங்கள் கண்டறிந்துள்ளவரை, வந்துப் பார்; யோசேப்பின் குமாரனாகிய, நசரேயனாகிய இயேசுவை” என்றான். இவனோ, “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” என்றான். அவனோ, “வந்து பார்” என்றான். 16 எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த அத்தாட்சி அதுதான். அதற்காக மற்ற எவருடைய வார்த்தையையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்களாகவே வந்து, பாருங்கள்! “வந்து பார்” என்றான். 17 அவன் வந்தபோது, இயேசு வரிசையில் நின்றுகொண்டு, ஒருவேளை ஜனங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்திருக்கலாம். பிலிப்பு நாத்தான்வேலோடு வந்தபோது, இயேசு, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்!” என்றார். 18 அவனோ, “ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிந்தீர்?” என்று கேட்டான். அது அவனை ஆச்சரியப்படுத்தினது. “எப்பொழுது நீர் என்னை அறிந்தீர்?” 19 அவரோ, “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருந்தபோதே, நான் உன்னைக் கண்டேன்” என்றார். ஒரு மலையினூடாக, முப்பது மைல் தூரம், இருந்தாலும், “நான் உன்னை கண்டேன்” என்றார். 20 அவர் யாராயிருந்தார் என்பதை அது காண்பித்தது. அவர் சர்வவியாபியான தேவனாய் இருந்தார்; ஒரு தீர்க்கதரிசியாயல்ல, ஆனால் தேவன்தாமே மாம்சத்தில் வெளிப்பட்டார். அந்தக் காரணத்தினால், அவரால் அவருடைய ஜீவனை கீழே வைக்க முடிந்தது, அதை மீண்டும் மேலே எடுத்துக்கொள்ளவும் முடிந்தது. 21 ஒரு சிறிய பெண்மணி ஒருநாள் கொஞ்சம் தண்ணீர் எடுக்க வெளியே வந்தாள். அவர் அவளிடத்தில் பேசி, “ஸ்திரீயே, தாகத்துக்குத் தா!” என்றார். 22 அவளோ, “யூதர்களாகிய நீங்கள் சமாரியர்களாகிய எங்களிடத்தில் அப்படிக் கேட்பது வழக்கமல்லவே. நமக்கு ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லையே” என்றாள். 23 அவரோ, “ஆனால் உன்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தது யார் என்று நீ அறிந்திருந்ததால், நீயே என்னிடத்தில் குடிப்பதற்கு கேட்டிருப்பாய். அப்பொழுது நீ இங்கே எடுக்கும்படி வராத தண்ணீரை நான் உனக்கு கொண்டு வருவேன்” என்றார். 24 அதற்கு அவளோ, “ஐயா, கிணறும் ஆழமாயிருக்கிறது. மொண்டுகொள்ள உம்மிடத்தில் ஒன்றுமில்லை, பின்னை எங்கிருந்து இந்த தண்ணீரைப் பெற்றுக்கொள்வீர்” என்று கேட்டாள். 25 அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவளுடைய ஆவியோடு தொடர்பு கொண்டிருந்தார். அவளுடைய தொல்லை என்னவாய் இருந்தது என்பதை அவர் கண்டறிந்தபோது, அவளுடைய தொல்லை அவள் விபச்சாரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள் என்பதாயிருந்தது. அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்திருந்தனர், மற்றும் அவள் ஆறாவது ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். இயேசு அவளிடத்தில், “போய், உன்னுடைய புருஷனை அழைத்துக்கொண்டு, இங்கே வா” என்றார். அதற்கு அவளோ, “எனக்கு புருஷன் இல்லையே” என்றாள். 26 அப்பொழுது அவரோ, “இல்லை, உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் உன்னுடையவன் அல்ல. எனவே, நீ நன்றாய் சொன்னாய்” என்றார். 27 இப்பொழுது பாருங்கள், யூதர். இயேசு அந்த அற்புதத்தை அவனுக்கு நிகழ்த்தியபோது, அந்த உண்மையான பற்றுறுதிகொண்ட யூதன், உண்மையான, உண்மையான யூதன், “நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா” என்றான். அந்த அடையாளங்கள் மேசியாவுடன் இருக்கவேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். 28 இப்பொழுது இங்கே ஒரு சமாரியன் இருக்கிறான். அந்த அற்புதம் அவளிடத்தில் செய்யப்பட்டபோது, அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குச் சொல்வார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நீர் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். 29 அவள் தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே ஓடிப்போய், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாதானோ?” என்றாள். நிச்சயமாக. 30 வேத வாக்கியங்களினூடாக நாம் அதை எடுத்துக்கொள்ளலாம், பிதாவானவர் அவருக்கு காண்பித்தக் காரியங்களை அவர் எப்படிச் செய்தார். வேதம், பரிசுத்த யோவானில் கூறியுள்ளது, ஏன் முடமாயிருந்த இருந்த அந்த ஜனங்கள் எல்லோரையும் சுகமாக்கவில்லை என்பதை குறித்து அவர்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, அவர், “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். பரிசுத்த யோவான் 5:19-ல், “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறது எதுவோ, அதையேன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்று கூறுகிறது. 31 இப்பொழுது, கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து, நமக்கு மத்தியில் இன்றைக்கு இருப்பாரானால்; அவர் செய்த அதே காரியங்களை நாமும் கூட செய்வோம் என்று வாக்களித்திருப்பாரானால்; அது உண்மையாக இருக்க வேண்டும், அல்லது அது உண்மையாக இல்லாமலிருக்க வேண்டும். வேதம், “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று உரைத்துள்ளது. 32 மேலும், நண்பர்களே, இன்றைக்கு எனக்கு உள்ள எல்லாவற்றோடும், நான் அதை அறிந்துகொள்ள உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறேன், அதாவது இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். அவர் கருத்தரிக்கப்பட்டு, மாசற்ற பிறப்பாக, பிறந்தார். அவர் பொந்தியு பிலாத்துவின் கீழ் பாடுபட்டார்; சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரலோகத்திற்கு ஏறிச் சென்று, தம்முடைய மகத்துவமானவரின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் பூமியின்மேல் இருந்தபோது செய்த அதே கிரியைகளை பரிசுத்த ஆவியானவர் செய்து கொண்டிருக்கிறார். என்னே ஒரு அழகான சிந்தனை! 33 என்ன ஒரு அழகான காலை, உயிர்த்தெழுதலின் முதலாம் காலை, பூமியில் உதயமாயிருந்த முதலாம் ஈஸ்டர்! அவருடைய உயிர்த்தெழுதலை குறித்து, நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த ஈஸ்டர், வந்து கொண்டிருக்கிற ஒரு மகத்தான ஈஸ்டரை, பரலோகத்திலிருந்து அவர் வருகிற வேளையை சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறது என்றும் நீங்கள் உணருகிறீர்களா? கிறிஸ்துவுக்குள் மரித்த யாவரும் உயிரோடெழுந்து அவரோடு செல்வார்கள். நாம் வருகிற, அந்த மகத்தான ஈஸ்டரை மாத்திரமே, முன்னோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும், இன்றைக்கு, அது எவ்வளவு அழகாக உள்ளது, என்ன ஒரு ஆறுதல், நாம் என்ன ஒரு ஆதாரத்தைப் பெற்றிருக்கிறோம், வேதம் அதை அறிவிக்கும்போது, அவருடைய சர்வ வல்லமை அதை அறிவிக்கும்போது, அவருடைய சுகமளிக்கும் வல்லமை அதை அறிவிக்கும்போது, அவருடைய மகத்தான ஆவி அதை அறிவிக்கும்போது, இயற்கையில் உள்ள ஒவ்வொரு காரியமும் அதை அறிவிக்கும்போது, அவருடைய சபை அதை அறிவிக்கும்போது, என்னுடைய இருதயம் அதை அறிவிக்கும்போது, மீண்டும் பிறந்த ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும் அதை அறிவிக்கும்போது, அதாவது, “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருக்கிறார், அவர் மீண்டும் வருவாரே! அவர் இப்பொழுதும், ‘நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறாரே!’” இப்போது கவனியுங்கள். 34 அது இந்த அழகான ஈஸ்டர் காலையாய் இருந்தது. அங்கே ஏராளமான வதந்தியும், பேச்சும் இருந்து வந்தன. சில ஸ்திரீகள் கல்லறையில் இருந்து திரும்பி வந்து, அவர்கள் தேவதூதர்களை குறித்த ஒரு தரிசனத்தைக் கண்டதாகக் கூறினர். அவர்கள் அதை ஒரு தோட்டக்காரர் என்று கருதினர்; மரியாள், தாய், “நீ யாரை தேடுகிறாய்?” என்று கேட்ட, ஒரு சத்தம் அவளுக்குப் பின்னே பேசுகிறதை அவள் கேட்டாள். அவர் திரும்பியபோது… 35 அவள் திரும்பிப் பார்த்து, “அவர்கள் என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. உமக்குத் தெரிந்தால், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளவேன்” என்றாள். அவர் திரும்பிப் பார்த்து, “மரியாளே” என்றார். 36 அவள் அவரை நோக்கி பார்த்தாள், அப்பொழுது அவள், “ரபூனி,” என்றாள், அதற்குப், “போதகரே!” என்று அர்த்தமாம். 37 அப்பொழுது அவர், “என்னைத் தொடாதே, நான் இன்னும் ஏறிப் போகவில்லை. ஆனால் நான் உங்கள் பிதாவினிடத்திற்கும், என்னுடைய பிதாவினிடத்திற்கும்; என் தேவனி டத்திற்கும், உங்களுடைய தேவனிடத்திற்கும் ஏறிப்போவேன். ஆனால் போய், என் சீஷர்களிடத்தில், நான் அவர்களை கலிலேயாவில் சந்திப்பேன் என்று சொல்லுங்கள்” என்றார். 38 அது எப்படி ஒரு வீணான கதையாகத் தோன்றிற்று, அவர்கள் இந்த மனிதனுடைய சுகந்தவர்கமிடுதலையும்; மரணத்தையும், அடக்கத்தையும் கண்டனர், இது நான்காம் நாளாய் இருந்தது, இல்லை அவர் மரித்ததிலிருந்து மூன்றாம் நாளாக இருந்தது. பேதுரு மனத்தளர்வடைந்து, மீன்பிடிக்கச் செல்ல விரும்பினான். அவர்கள் இருவரில், கிலெயோப்பா என் பெயர் கொண்ட ஒருவன், “நாம் வீட்டிற்கு, எருசலேமுக்குத் திரும்பிச் செல்வோம்” என்றான். அந்தக் காலை, அவர்களுடைய வழியிலே, அவர்கள் நடந்து சென்றனர். பேதுரு தன்னுடைய மீன் பிடிக்கும் தூண்டிலை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று, மீன்பிடித்தபோது. இவர்கள் இருவரும் அவர்களுடைய பாதையில், சோகமாக இருந்தனர். அவர்கள் பாதையில் நடந்து சென்றபோது, “சரி, வாழ்க்கை வாழத் தகுதியற்றதாயிருக்கிறது. ஓ, அவர் மேசியாவாக இருந்தார் என்று நாம் எப்படி விசுவாசித்தோம்! மரித்தோரை உயிரோடு எழுப்பிய அந்த மனிதன், எப்படி நின்று, அந்தப் பிரதான ஆசாரியன் அவரை குறித்து பரிகாசம் செய்ய அனுமதிக்க முடியும்? தரிசனத்திற்கு பிறகு தரிசனமாக காண முடிந்த அந்த மனிதன், எப்படி ஒரு ரோம போர் சேவகன் அவருடைய முகத்தில் ஒரு கந்தையைச் சுற்றிக் கட்டி, அவரை தலையில் அடித்து, ‘நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உம்மை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்’ என்று கூற அனுமதிக்க முடிந்தது? மரித்தோரையும் அவர் உயிரோடு எழுப்பக்கூடியதைப் பார்த்துவிட்டு, சிலுவையில் எப்படி அவர் இரக்கத்திற்காக கதற முடியும்?” என்றனர். ஓ, அது மனத்தளர்வடைந்திருந்த நேரமாயிருந்தது! 39 அந்த மனத்தளர்வடைகிற நேரம் ஒவ்வொரு விசுவாசிக்கும் வருகிறது, உங்களை பரீட்சிக்கும்படியாக, உங்களைப் சோதிக்கும்படியாக, நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா என்பதை காணும்படியாக வருகிறது. “தேவனிடத்துக்கு வருகிற ஒவ்வொரு குமாரனும், முதலாவது சோதிக்கப்பட்டு, குழந்தை போன்று பயிற்சி பெற வேண்டும்.” 40 இன்றிரவு இங்குள்ள உங்களில் சிலர், சந்தேகத்திற்கிடமின்றி, அதே சோதனையினூடாக செல்வீர்கள். நாம் ஒரு ஜெப வரிசையை அழைக்க வேண்டுமானால், யார் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது, வேறு யாருக்குமே தெரியாது; அவைகள் யாவும் ஒன்றாக கலக்கப்பட்டு, உங்களிடத்திற்கு கொடுக்கப்படுகின்றன. அந்த நேரத்தில் என்னுடைய சிந்தை எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கிருந்து நான் அழைப்பேன். ஒரே நேரத்தில் நாம் ஒரு சிலரைத் தவிர எல்லோரையும் நிற்க வைக்க முடியாது. ஒருவேளை, இரண்டு டஜன், ஜெப வரிசையில் கடந்து செல்வார்கள். எல்லோருமே வருவதற்கு விரும்புகிறார்கள். அவர் உங்களை கடந்து சென்று விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அவர் கடந்து செல்லவில்லை. நீங்கள் அவரை உண்மையாகவே விசுவாசிக்கிறீர்களா என்று பார்க்கவே, அவர் உங்களை சோதித்துக் கொண்டிருக்கிறார். தரிசனம் சுகப்படுத்துகிறதில்லை; தரிசனம் அவருடைய பிரசன்னத்தை மாத்திரமே ரூபகாரப்படுத்துகிறது. 41 நான் இங்கே அமர்ந்துகொண்டு, கூட்டத்தாரை நோக்கி இப்பொழுது பார்த்துக்கொண்டிருந்தேன். நான் என்னுடைய நண்பர்களில் ஒருவரை—ஒருவரை, கென்டக்கியில் இருந்து வந்துள்ள திருமதி காக்ஸைக் காண்கிறேன். ஒரு சில வாரங்களுக்கு முன்னர், அவளுடைய முகத்தில் ஒரு பெரிய புற்றுநோய் இருந்தது, அது அவளுடைய கண்ணைச் சுற்றிலும் அரித்துவிட்டிருந்தது. அவள் மரித்துக் கொண்டிருந்தாள். திருமதி. உட், என்னுடைய நல்ல சினேகிதி, தொலைபேசியில் என்னை அழைத்து, அழுதுகொண்டே, “இன்னும் ஒரு சில நாட்களில் தாயினுடைய கண்ணை அது அரித்துவிடப்போகிறது என்று நான் நினைக்கிறேன்” என்றாள். மருத்துவர் அதை ஒருவிதமான மருந்தினைக் கொண்டு சேதப்படுத்தி, அதை சிதறச் செய்துவிட்டிருந்தார். அது ஒரு பயங்கரமான இக்கட்டு நிலையிலிருந்தது. உள்ளே சென்று, ஒரு எளிமையான ஜெபத்தை, நங்கூரமிடப்பட்ட விசுவாசத்தோடு, அது சம்பவிக்கும் என்று ஏறெடுத்தேன். இன்றிரவு இங்கே அவள் இதோ, பரிபூரண ஆரோக்கியத்துடன் சாதாரணமாக அமர்ந்திருக்கிறாள்; அதனுடைய ஒரு இடம் கூட சுகமாக்கப்படாமல் விடப்படவில்லை, அவளுடைய முகத்திலே, அது முழுமையாக குணமாக்கப்பட்டது. இங்கே நமக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அதேவிதமான மற்றவர்களும் சுற்றிலுமிருக்கின்றனர். ஏன்? அது இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து, அவர் ஜீவிக்கிறார் என்ற காரணத்தினாலேயாகும். 42 ஒரு குஷ்டரோகியைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்று கூற முடிந்த அதே ஒருவர், ஒரு புற்று நோயைத் தொட்டு, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால், “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்று கூற முடியும். 43 கிலெயோப்பாவும் மற்றவர்களும் மனந்தளர்ந்துபோய், நடந்து போகையில், அவர்கள் அந்த ஒருவிதமான சோகமான காலைகள் ஒன்றில் இருந்தனர், ஒவ்வொரு காரியமும் தவறாக போய்க் கொண்டிருப்பது போல் தென்பட்டது. திடீரென்று, யாரோ ஒருவர் தோன்றினார், அவர்களுக்குப் பின்னாக அவர் வந்தபோதும், நடந்து வந்து, அவர்களோடு சேர்ந்து கொண்டார். அது கர்த்தராகிய இயேசுவாயிருந்து என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லையே! அவர் உயிரோடிருந்தார், அவரை நேசித்த அநேக ஜனங்களுக்கு அது தெரியாதிருந்தது. 44 அது இன்றைக்கும் அதே வண்ணமாக உள்ளது. இன்றைக்கும் கர்த்தரை நேசிக்கிற அநேக ஜனங்கள், தெளிவாக உணருகிறதில்லை. நீங்கள் அதைக் குறித்து அவர்களுக்குச் சொல்லலாம், அதே சமயத்தில் அவர் என்றென்றும், இன்றிரவும் உயிரோடிருக்கிறார் என்பதையும், அவர் இன்றிரவு இந்த சபையில் இங்கே இருக்கிறார் என்பதையும், அவர் நமக்கு மத்தியில் இருக்கிறார் என்பதையும், அவர் சரீரப்பிரகாரமாக வரும்வரை, மாம்ச சரீரத்தில் வரும்வரை இருப்பார் என்பதையும் அவர்களால் அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” 45 அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பேசத் தொடங்கி, வீதியில் சென்று கொண்டிருந்தபோது, இயேசு, இயேசு செய்த முதல் காரியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர் நேரடியாக வேதத்திற்குச் சென்றார். அப்பொழுது அவர், “ஓ, தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே?” என்று கேட்டார். ஏனென்றால் அவர் அவர்களிடத்தில், “நீங்கள் ஏன் துக்கமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். 46 அப்பொழுது அவர்கள், “நீர் ஒரு அந்நியராயிருக்கிறீரோ? என்று கேட்டனர். நசரேயனாகிய இயேசுவை நீர் அறிந்திருக்கவில்லையா, அவர் மேசியாவாயிருந்து, இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நினைத்திருந்தோம், அவர் சிலுவையில் அறையப்பட்டது முதற்கொண்டு இது மூன்றாம் நாளாக இருக்கிறது என்பதை நீர் அறியவில்லையா? அவர் வாக்கில், வல்லமையுள்ள மனிதனாயிருந்தார். அவர் ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசியாக இருந்தார், ஏனென்றால் தேவன் அவர் மூலமாய், அநேக அற்புதங்களையும் மற்ற காரியங்களையும் செய்தார். இது மூன்றாம் நாளாக இருக்கிறதே; இப்பொழுது அவர்கள் அவரைக் கொன்று, அடக்கம் செய்துள்ளார்கள், அவர் கல்லறையில் இருந்தார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டார் என்று சில ஸ்திரீகள் எங்களிடத்திற்கு வந்து எங்களுக்குக் கூறினார்கள். அது ஒரு முட்டாள்தனமான கதையாய் இருந்ததென்று நாங்கள் அறிந்து, நாங்கள் எங்களுடைய சாலையில் திரும்பி சென்று கொண்டிருக்கிறோம்” என்றனர். 47 அப்பொழுது அவர் வார்த்தையைத் திறந்து காண்பிக்கத் துவங்குகிறார். ஓ, நான் தேவனுடைய நித்திய வார்த்தையை நேசிக்கிறேன்! அவர் வேதவாக்கியங்களினூடாக, மோசேயிலிருந்து தொடங்கி, செல்லத் துவங்குகிறார். அவர் எந்தக் காரியத்தையும் வெளிப்படுத்தாமல் விட்டுவிடவில்லை, அவர் நேரடியாக வார்த்தைக்குச் சென்றாரே! 48 தேவனால்-அனுப்பப்பட்ட எந்த மனிதனும், அவன் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவன் தேவனுடைய வார்த்தையோடு தரித்திருப்பான். அவன் தரித்திருக்கவில்லை யென்றால், அவன் ஒரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் அல்ல. 49 அவர் சரியாக வார்த்தைக்குச் சென்றார். கிறிஸ்து மரிக்க வேண்டியதாயிருந்து, மீண்டும் உயிரோடெழுந்து, தம்முடைய மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டியதாயிருந்தது என்பதை வார்த்தையினால் அவர் காண்பித்தார். இப்பொழுது, ஓ, அவர்கள் எப்படி பேசியிருந்திருக்க வேண்டும்! 50 நான் ஒரு சில மணி நேரங்கள் அவரோடு வழியிலே பேசியிருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். (நீங்கள் விரும்பவில்லையா?) நீங்களோ, “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், நான் நிச்சயமாக விரும்புகிறேன். என்னால் முடியும் என்று விரும்புகிறேன்” என்று கூறலாம். பாருங்கள், நாம் அதை இப்பொழுதே செய்ய முடியும். அவர்தான் உங்கள் இருதயத்தில், உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதை அடையாளங் கண்டுகொள்ளவில்லை. 51 அவர் அங்கே நகரத்தின் அருகே வந்தபோது இப்பொழுது கவனியுங்கள், மாலை வேளையாகிக்கொண்டிருந்தது, அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போல காண்பித்தார். 52 அவர் உங்கள் இடத்திலும் கூட, அதைச் செய்யலாம். அவர் அப்புறம் போய்க்கொண்டிருக்கிறது போல உங்களை நினைக்க வைக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்ய மாட்டார். அவர் அவ்வாறு செல்ல மாட்டார். நீங்கள் அவரை அழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 53 அப்பொழுது அவர்கள் அவரிடத்தில், “ஓ, பொழுதும் போயிற்று. இப்பொழுது போக வேண்டாம், ஆனால் தயவுசெய்து உள்ளே வந்து எங்களோடு தங்கியிரும்” என்றனர். நீங்கள் அவருக்கு அந்தவிதமான அழைப்பைக் கொடுங்கள், அப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்று கண்டறியுங்கள். அவர்கள், “இப்பொழுது பொழுதும் போயிற்று, நீர் வந்து எங்களோடு தங்கியிரும். சாயங்காலமாயிற்று” என்றனர். அப்பொழுது அவர் திரும்பி, சிறிய உணவகத்திற்குள், சிறிய விடுதிக்குள் சென்றார். ஐரோப்பாவில் அவர்கள் அதை இன்னமும் உடையவர்களாயிருக்கிறார்கள். நீங்கள் சாப்பிட்டு உறங்க மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திற்கும் உங்களுடைய உணவக விடுதியில், ஒரே கட்டணம் செலுத்தப்படும். 54 அவர் அவர்களோடு உள்ளே சென்றபோதோ! இங்கே ஒரு அழகான பகுதி உள்ளது. அந்த நாள் முழுவதும், அவர்கள் அவரோடு பேசினபோது, அவர் ஒரு காரியத்தையும் ஒருபோதும் கூறவில்லை. அதே சமயத்தில் அவர்கள் அவரோடு நடந்து அவரோடு பேசியிருந்தனர், ஆனால் இதற்கு முன்னால், அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. 55 அன்றொருநாள் அந்த விபத்திலிருந்து உங்களைக் காத்தது யார்? அந்த குழந்தை சுகம் பெற அனுமதித்தது யார்? உங்களுக்காக அந்த மளிகைக் கட்டணத்தை செலுத்தினது யார்? அது அவராயிருந்தது, ஆனால் நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளுகிறதில்லை. இன்று இரவு நீங்கள் சபைக்கு வரும்படி ஆரோக்கியத்தை அளிக்கிறது யார்? அது அவராய் இருக்கிறது, ஆனால் நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளுகிறதில்லை. ஓ, நாம் அவர்களைப் போன்று மாத்திரம் செய்ய முடிந்தால், அவரை உள்ளே வரும்படி அழையுங்கள்! 56 அவர் உள்ளே நுழைந்து, உட்புறம் சென்றபோது, கதவுகளை மூடினர், அப்பொழுது அவர் மற்ற எந்த மனிதனாலும் செய்ய முடியாத அதை அந்த விதமாக அவர் செய்தார். அவரால் மாத்திரமே அதை செய்ய முடியும், ஏனென்றால் அவருடைய சிலுவையேற்றத்திற்கு முன்பு அவர் அவர்களோடு இருந்தார். அவர் அப்பத்தை எடுத்து, அவர் அதை அந்தவிதமாகச் செய்தார், அதாவது அதை செய்யக்கூடிய அவருடைய சொந்த வழியாக அது இருந்தது. அவர்களுடைய கண்கள் திறந்தன, அது அவராக மாத்திரமே இருக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர் அவர்களோடு நீண்ட நேரம் தங்கியிருக்கவில்லை. [சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார்—ஆசி.] அவர் ஒரு நொடிப்பொழுதில், அவர்களுடைய பார்வையை விட்டு மறைந்து போனார். 57 அவர்களுடைய பாதையில், அவர்கள் தங்களால் செல்ல முடிந்தளவு கடினமாக, விரைந்தோடி வெற்றியை ஆர்ப்பரித்து, “கர்த்தர் உண்மையாகவே உயிர்த்தெழுந்துள்ளார்” என்று அவர்களிடத்தில் கூறினர். அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை குறித்து விவாதிக்க திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் அதைக் குறித்து வம்புசெய்ய திரும்பிச் செல்லவில்லை. ஆனால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனரே! 58 இப்பொழுது, நண்பனே, ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இயேசு கிறிஸ்து, ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்றால்; வேதாகமம் உண்மையானதாக இருந்தால், அவர், “நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்றார்; அவர் அவருடைய உயிர்த்தெழுதலின் நாளில் இருந்ததுபோலவே, அவர் இன்றிரவு இந்த கட்டிடத்தில், இங்கே உயிரோடு இருக்கிறார். அவர் ஒரு சரீரத்தில் இருக்கிறார். 59 அவர்களில் சிலர் ஒன்றாக கூடியிருந்தனர். அவர் சுவர்களினூடாக வந்து, அவர்களுக்கு மத்தியிலே, பிரசன்னமாகி, “இங்கே, என்னைத் தொட்டு உணர்ந்துப் பாருங்கள். என் கரங்களில் உள்ள என் தழும்புகளைப் பாருங்கள். ஒரு ஆவிக்கு எனக்கு உண்டாயிருக்கிறதுபோல மாம்சமும் எலும்புகளும் உண்டாகியிருக்குமா?” என்றார். அப்பொழுது அவர், “எனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள்” என்றார். அப்போது அவர்கள் அவருக்கு மீனையும் அப்பத்தையும் கொடுத்தனர். அப்பொழுது அவர் அங்கே நின்று, அவர்களுக்கு முன்பாக அதைப் புசித்து, “நான் புசிக்கிறதை நீங்கள் காண்பதுபோல ஒரு ஆவி புசிக்காது” என்றார். 60 அவர் என்னவாய் இருக்கிறார்? அவர் இன்றிரவு நமக்கு மத்தியில் மகத்தான, ஜீவனுள்ள யேகோவா தேவனாயிருக்கிறார். அவர் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்களுக்கு நடுவில் இருக்கிறார்: “நான் அவர்கள் நடுவில் இருப்பேன்.” 61 இப்பொழுது நான் இங்கே இதைத்தான் நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் வியர்த்துக் கொண்டும், காத்துக் கொண்டுமிருக்கையில், இந்த ஜனக் கூட்டத்தாரிடத்தில் கிறிஸ்து வருவாரானால்; இந்த ஈஸ்டரில், அவர் உயிரோடிருக்கிறார் என்றும், இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்றும் நிரூபிப்பார்; அப்பொழுது அவர் எந்த காரியத்திற்காக மரித்தாரோ அதை அவரிடத்தில் கேட்கவும், அதை நீங்கள் பெற்றுக்கொள்ளவும் உங்களுக்கு ஒரு உரிமை உண்டு. அது உண்மை என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] நிச்சயமாகவே, அது சத்தியமாயுள்ளது. 62 இப்பொழுது, நான் உங்களிடத்தில் நீண்ட நேரம் பேச முடியும், ஆனால் என்னால் பேச முடிந்த எல்லா வார்த்தைகளைக் காட்டிலும் கிறிஸ்துவினிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தை அதிகப் பொருள்படும்; களைப்பாயும், குரலில் அழுத்தமாகவும், அது குரலில் உள்ளதுபோல சோர்வாகவும் இருக்கிறது. 63 அதன்பின்னர் பேசுவதில், மற்றொரு காரியம் உள்ளது. இது கடினமாக உள்ளது, ஏனென்றால் அதைப் போன்ற ஆவியின் அபிஷேகத்தோடு வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு இது என்னுடைய வீடாக உள்ளது. ஏன்? ஏனென்றால் இது என்னுடைய வீடாயுள்ளது. இயேசு, “ஒரு தீர்க்கதரிசி தன்னுடைய சொந்த வீட்டிலும், தன்னுடைய சொந்த நாட்டிலும், தன்னுடைய சொந்த நாட்டிலும் கூட” என்றார். அது அந்தவிதமாக சம்பவிக்கிற ஏதோ ஒரு காரியமாக உள்ளது. 64 அவர் தம்முடைய சொந்த வீட்டிற்கு சென்றபோது அவர்கள் கூறினர், அவர்கள், “இவர் தச்சனுடைய மகன் அல்லவா? அவருடைய தாயார், மரியாள், இங்கே நம்மோடு இருக்கவில்லையா? அவருடைய சகோதரர்கள், மற்றும் அவருடைய சகோதரிகள் எல்லோரும் இங்கிருக்கவில்லையா? நமக்கு அவர்களைத் தெரியாதா? அவர் எந்தப் பள்ளியிலிருந்து வெளியே வந்தார்? அவர் எந்த வேதாகம கருத்தரங்கில் ஒரு பட்டம் பெற்றார்? அவர் என்ன சான்றுகளைப் பெற்றுள்ளார்?” என்றும் கேட்டனர். மேலும் அவர் எந்த பள்ளியிலிருந்தும் அல்லது எந்த வேதாகம கருத்தரங்கிலிருந்தும், அல்லது எந்த சான்றுகளைப் பெற்றுக்கொண்டும் வரவில்லை, ஆனால் அவர் தேவனிடமிருந்து வந்தார். ஆனால் அவர்களால் அதைக் காண முடியவில்லை. அவர்கள், “அவர் இந்த ஞானத்தை எங்கே பெறுகிறார்?” என்று கேட்டனர். 65 மேலும் அவர் அந்த ஜனங்களின் நினைவுகளை வகையறுப்பதை அவர்கள் கண்டபோது. பேதுரு அவரிடத்தில் வந்தபோது, அவர், “உன்னுடைய பெயர் சீமோன். உன்னுடைய தந்தையின் பெயர் யோனா” என்றார். அது அவர்களை தரைமட்டமாக்கிற்றே! “அவர் அவர்களை எப்படி அறிந்து கொண்டார்?” 66 பரிசேயர்கள் அருகில் நின்று, “அவன் ஒரு பெயல்செபூல். அவன் குறி சொல்லுகிறவர்களின் தலைவன். அவன் ஒரு பிசாசு!” என்றனர். 67 இயேசு, “மனுஷகுமாரனாகிய, எனக்கு விரோதமாக நீங்கள் சொல்கிறது, உங்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து இதே காரியத்தைச் செய்யும்போது, நீங்கள் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூறும்போது, அது உங்களுக்கு, இம்மையிலும் அல்லது மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்றார். ஆகையால், அது ஒரு அபாயகரமான காரியமாய் இருக்கிறது. எனவே எப்படி அவர் அறிந்துகொண்டார்? அவர் ஏன் அதைக் கூறினார்? அந்த அடையாளங்கள் இந்த கடைசி நாள் வரையில் ஓய்ந்து போகும் என்பதை அவர் அறிந்திருந்தார். 68 மேலும் இந்த கடைசி நாட்களில், அவர் தம்முடைய கோபத்தை, ஒரு நீதியுள்ள ஜனங்கள்மேல் நீதியாய் ஊற்றமாட்டார். அவர்கள்…நாம் தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டோடம். நாம் எல்லோரும் களிகூருகிற நேரங்களையும், வானொலி நிகழ்ச்சிகளையும், தணிக்கை செய்யப்படாததையும், எல்விஸ் பிரெஸ்லி, ஆர்த்தர் காட்ப்ரே, பழைய அசுத்தமான நகைச்சுவைகளையும், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் குறிப்பிடத்தக்கவைகளைக் குறித்தும் சிந்திக்கிறோம். நாம் புதன்கிழமை இரவு ஜெபக் கூட்டத்திற்கு வராமல், வீட்டிலேயே, அதைப்போன்ற அப்படிப்பட்ட அற்பத்தனமானதைக் காணத் தரித்திருந்து, நம்மை கிறிஸ்தவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறோமே? 69 அதன்பின்னர் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றி, அவருடைய உயிர்த்தெழுதலின் அடையாளங்களை காண்பிக்கிறபோது, நாம் அதைப் பழித்துரைத்துவிட்டு, புறக்கணிக்கிறோம். அதை செய்வது, மன்னிக்கப்பட முடியாத பாவமாய் இருக்கிறது. இயேசு, “அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினால், அது இம்மையிலும் அல்லது மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்றார். எனவே தேவனுடைய வார்த்தை உண்மையென்று நிரூபிக்கும்படி, இந்த கடைசி நாட்களில் அந்த ஆவி வர வேண்டும். 70 மேலும், நான் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின், மற்றும் என்னுடைய சொந்த ஆத்துமாவின் உணர்வின் கீழும் கூறுகிறேன்: அதே பரிசுத்த ஆவியானவர் (ஆவி) இங்கே இப்பொழுது இந்த ஜனங்களின் மத்தியில் இருக்கிறார். இப்பொழுது அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார் என்று நான் உரிமை கோரினேன். அவர் உயிரோடிருக்கிறார், அவர் சதாகாலமும் உயிரோடிருக்கிறார் என்று நான் உரிமை கோரினேன். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறதவராக இருக்கிறார் என்று நான் உரிமை கோரினேன்; அதே குறிக்கோளிலும், அதே வல்லமையிலும் இருக்கிறார்; ஒவ்வொரு காரியத்திலும் அதே விதமாக இருக்கிறார், எல்லாவற்றிலும் ஆனால் அவருடைய மாம்சபிரகாரமான சரீரம் மகிமையில், மகத்துவமானவரான தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து, இயேசு கிறிஸ்து செய்தது போன்றே செய்துகொண்டும், கிரியை செய்து கொண்டும், அசைவாடிக்கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார், ஏனென்றால் அது அவருடைய உயிரத்தெழுதலின் நிரூபணமாயிருக்கிறது. என்னே ஒரு அழகான வேளை! நான் எங்கே நிற்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். 71 இப்பொழுது, இந்த சிறு கட்டிடத்தில் இங்கே இருக்கின்ற கிட்டத்தட்ட நூறு பேர் அல்லது இருநூறு பேர் இன்றிரவு இங்கேயே நெருக்கிக்கொண்டிருக்கிற சிறு கூட்டத்தாரிடத்தில் மாத்திரமல்ல, ஆனால் நான் அந்த வாக்குமூலத்தை கோடிக்கணக்கானோர் மத்தியில் கூறியிருக்கிறேன். வேதாகமத்தை ஒரு கையிலே பிடித்துக்கொண்டு, குரானை மற்றொரு கையிலே பிடித்துக்கொண்டு, “ஒன்று சரியானது, மற்றொன்று தவறானது” என்று கூறியிருக்கிறேன். ஒவ்வொரு முகமதிய குருவான வரையும் வந்து நிரூபிக்கும்படி சவாலிட்டிருக்கிறேன்; அல்லது வேறு எவரையும், புத்த மதத்தினர் அல்லது அவர் யாராக இருந்தாலும், குரானுக்கு எதிராகவும் அவர்களுடைய மதத்திற்கெதிராகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் அமைதியாக இருக்கின்றனர். 72 ஆனால், சகோதரர்களே, நான் அதைச் செய்ய காரணம், ஏனென்றால் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்! அவர் சத்தியமாய் இருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார். அவர் இங்கிருக்கிறாரே! 73 இப்பொழுது நான் செய்யக்கூடியது எனக்குள்ளாக ஒன்றுமேயில்லை, அது ஒரு தேவனுடைய வரமாக உள்ளது. “அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள்?” அது உங்களை அளிப்பதாகும். 74 இப்போது இந்தக் கட்டிடத்தில் சரியாக அநேக, அநேக தூதர்கள் இருக்கின்றனர். நீங்களோ, “அது வேதப்பிரகாரமானதா?” என்று கேட்கலாம். அது வேதப்பிரகாரமானதாயுள்ளது. நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். எத்தனை கிறிஸ்தவர்கள் இங்கே இருக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? சரி, நீங்கள் உங்களுடைய கரங்களை கீழே விடலாம். வேதம், “தேவனுடைய தூதர்கள் அவருக்கு பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்கியிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது. அப்படியானால், தூதர்கள் இங்கே இருக்கின்றனரே! 75 ஆகையால் கிறிஸ்து, “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருப்பேன்” என்றார். அப்படியானால், அவர் இங்கே இருக்கிறாரே! ஒரே காரியம், நீங்கள் அவரை காண முடியாது என்பதாகும், ஆனால் விசுவாசத்தினாலே நாம் அதை விசுவாசிக்கிறோம். 76 இங்கே இதனூடாக வானொலி, சத்தங்களும் கூட வந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும். இங்கே இதனூடாக படங்களும் வந்துகொண்டிருக்கின்றன என்பதை என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும். அது இங்கே இந்தக் குழாயின் மேல் மோதாது; அது இதன்மேல், இந்த படிகத்தின் மேல், இந்த ஒலிபெருக்கியின் மேல் அடிக்காது; அது இந்த பொருட் துண்டுக்குள்ளும் வராது, ஏனென்றால் அது அந்த விதமாக உண்டாக்கப்படவில்லை. ஆனால் அந்தப் படத்தை மறுஉற்பத்தி செய்யும் ஒரு துண்டு பொருள் உண்டு. 77 தேவன் சபையில் சிலரை, முதலாவது அப்போஸ்தலராகவும், பின்னர் தீர்க்கதரிசிகளாகவும், போதகர்களாகவும், சுவிசேஷகராகவும், மேய்ப்பராகவும், எல்லாவற்றையும் சபையானது சீர்பொருந்தும்பொருட்டு ஏற்படுத்தினார். நாம் எப்படி ஒன்றை நிராகரித்துவிட்டு, மற்றொன்றை அது அவ்வண்ணமாயிருக்கவில்லையே என்று கூறமுடியும்? தேவன் தாமே அதைச் செய்கிறார். அது இந்த உலகத்தில் பரிசுத்த ஆவியானவருக்கு உங்களையே அளிப்பதேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை. மேலும் பரிசுத்த ஆவியானவர் அங்கிருந்து பொறுப்பேற்கிறார், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. அது பரிசுத்த ஆவியானவருடைய இராஜாதிபத்தியக் கிரியையாயிருக்கிறது. 78 இப்பொழுது, நண்பர்களே, என்னுடைய சொந்த பட்டணம். இந்த எழுப்புதலை முடிப்பதற்கு முன்பாக, நான் இப்பொழுது இதைக் கூற விரும்புகிறேன். இந்நாட்களில் ஒன்றில் ஜெபர்ஸன்வில்லில் ஒரு சாம்பலும் விடப்பட்டிருக்காது, சார்லஸ்டவுனிலும் ஒன்றும் விடப்பட்டிருக்காது, லூயிஸ்வில்லிலும் ஒன்றும் விடப்பட்டிருக்காது. இந்த உலகம் நியாயத்தீர்ப்பிற்கு ஏற்றதாக உள்ளது. ரஷ்யா மாஸ்கோவிலிருந்து சுடக்கூடிய ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டை இப்பொழுது அவர்கள் வைத்துள்ளனர், நான்காவது தெருவில் தரையிறங்கி, இங்கு சுற்றிலுமுள்ள இந்த வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் ஒவ்வொன்றையும், ஒரே வெடிகுண்டினால், பூமிக்கு அடியில் எழுபத்தைந்து அடி ஆழத்தில் புதையச் செய்ய முடியும். ஒரு அணுகுண்டு; பதினைந்து மைல்கள் சதுரத்திற்கு, அது தரையில் நூற்றைம்பது அடி ஆழத்திற்கு செல்லும். அது கைத்துப்பாக்கி விசையிலும் அவ்வாறுள்ளது. கடிகாரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாக உள்ளது. ஏன் அந்த நேரம் வரை காத்திருக்க வேண்டும்? 79 நினைவிருக்கட்டும், “இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நமக்கு ஏற்கனவே ஒன்று காத்திருக்கிறது.” ஹைட்ரஜன் வெடிகுண்டுகளைக் குறித்தோ அல்லது வேறு எந்த காரியத்தை குறித்து பயப்படாதீர்கள். நீங்கள் உங்களுடைய இதயத்தில் கிறிஸ்துவை பெற்றுக்கொண்டிருக்கும் வரை, எனக்கு தெரிந்தவரை அதுவே மிகச் சிறந்த வெடிகுண்டு பாதுகாப்பிடமாகும். அது சிறகுகளால் உண்டாக்கப்பட்டது; அவருடைய செட்டைகளின் கீழே நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், இந்த காரியங்களைக் குறித்து கவலைப்படாதீர்கள். 80 ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராயில்லாமலிருந்தால், நீங்கள் நிச்சயமாகவே ஒரு மோசமான இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இருதயம் எந்த நிமிடத்தில் துடிப்பதை நிறுத்தப்போகிறது என்று உங்களுக்குத் தெரியாது. புருஷர்கள் கடைசி நாட்களில், இருதய கோளாறினால் மரிப்பார்கள் என்று வேதம் கூறியுள்ளது, “மனுஷருடைய இருதயம் சோர்ந்து போகும், பயமும், தத்தளிப்பான நேரங்களும், ஜனங்களுக்கிடையே இடுக்கணும் உண்டாகும்.” பெண்களைவிட, பத்து மடங்கு ஆண்கள் மரிப்பதை நோக்கிப் பாருங்கள்; பெண்களினுடையை இருதயம் சோர்ந்து போகும் என்று வேதம் ஒருபோதும் கூறவில்லை, அது, “மனுஷருடைய இருதயங்கள் சோர்ந்து போகும்” என்றே உரைத்துள்ளது. அது முற்றிலுமானதாய், பரிபூரணமானதாய் உள்ளது. 81 அன்றொருநாள் ஓக்லாந்தில், நானும் என் மனைவியும் அங்குள்ள சான் பிரான்சிஸ்கோவில், அந்த பெரிய நிலநடுக்க அதிர்வு உண்டானபோது இருந்தோம். கட்டிடங்கள் குலுங்கும் வரை, புகைபோக்கிகள் விழுந்து போகும் வரை, பூமியானது அங்கே அதிரத் துவங்கி, குலுங்கியது. அந்த இடங்களிலிருந்து புகையோடு, அந்த விதமாக பெரிய காற்று பந்துகள்போல அல்லது புகைக்கரி, அது என்னவாக இருந்ததோ, அவை மேலே எழுப்பின. ஜனங்கள் வீதிகளில், கூச்சலிட்டுக் கொண்டு ஓடினர். அப்பொழுது நான், “உண்மையாகவே கர்த்தர் பிரசன்னமாகும்போது அது என்னவாயிருக்கும்?” என்று எண்ணினேன். அப்பொழுது விழுந்துபோன மதுபான புட்டிகளைப் பொறுக்கியெடுத்து, திரும்பவும் அலமாரிகளில் வைத்து, அதை விற்றனர். அப்பொழுது ஜனங்கள் அதை வாங்குவதற்கு வந்தனர். யாரும் அதை வாங்கவில்லையென்றால் அந்த மனிதனால் அதை விற்க முடியாது. அது உண்மை. 82 அது, நாங்கள் குற்றவாளிகள். சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லட்டும். நான் ஒரு அமெரிக்கன், நான் என் தேசத்தை நேசிக்கிறேன். ஆனால் இந்த பண்டைய தேசம் தராசில் நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டது. இன்றிரவு இந்த பிரசங்க பீடத்தின் பின்னே நான் ஒரு ஊழியக்காரனாக இருப்பதுபோல் அவ்வளவு நிச்சயமாக, அவள் மூழ்கிக்கொண்டிருக்கிறாள். இப்பொழுது நான் தேவனிடத்தில் தயையைக் கண்டறியும்படிக்கு அதை நான் கூறிக் கொண்டிருக்கிறேன். அதைக் கூறும்படிக்கு தேவன் அதை என் இருதயத்தில் வைத்தபடியால் நான் அதை கூறிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது மிகச் சிறந்த காரியம் கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தப்படுவதேயாகும். 83 இப்பொழுது அவரை விசுவாசியுங்கள், அவரிடத்தில் விசுவாசமாயிருங்கள். இப்பொழுது, நான் கூறக்கூடிய எல்லா வார்த்தைகளும், நான் மீண்டும் கூறுகிறேன், இயேசு என்ன கூறுவார் என்பதற்கான ஒரு காரியத்தையும் இது பொருட்படுத்தாது. ஆனால் இன்றிரவு இந்த கூட்ட ஜனங்களோடு, நான் எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? நான் தவறாக குறிக்கிடாமலும், ஏதோ ஒரு காரியத்தை தவறாக வியாக்கியானிக்காமலும், சத்தியத்தையே கூறியிருக்கிறேன். இப்போது இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டு, வாக்களித்திருந்தால், அவர் செய்த அதே காரியங்களை நாமும் கூட செய்வோம். நான் ஒரு சிறு ஆண் குழந்தையாயிருந்ததிலிருந்தே…உரிமைகோரியிருக்கிறேன். 84 நான் என்னுடைய முதல் தரிசனத்தைக் கண்டபோது, எனக்கு பதினெட்டு மாதங்கள்கூட ஆகவில்லை, எப்படியிருந்தாலும், நான் நினைக்கிறேன், இரண்டு வருடங்கள் கூட பூர்த்தியாகவில்லை. இது, என் வாழ்நாள் முழுவதும், இருந்து வந்துள்ளது. இங்கே கூடாரத்தில் உள்ள ஜனங்கள், அதை அறிந்திருக்கின்றனர். நான் இங்கு இருந்தவரை, அது ஒரு முறை கூட எப்போதும் தவறியிருக்கவில்லை. அது ஒருபோதும் தவறாது, ஏனென்றால் அது தேவனாயுள்ளது. அது உலகத்தை சுற்றிலும் சென்று, ஒரு மகத்தான எழுப்புதலை எரியச் செய்துள்ளது. இப்பொழுது, தேவனுடைய கிருபையினால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு, என்னுடைய சொந்த கூட்டத்திலேயே, நான் இரண்டாவது முறையாக பத்து லட்சம் ஆத்துமாக்களை ஆதாயம் செய்துகொண்டிருக்கிறேன். இரண்டாவது முறையாக பத்து லட்சம், அது உண்மையே. மேலும் வெளியே சென்று ஆதாயப்படுத்தின மற்ற லட்சக்கணக்கானவர்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஓரல் ராபர்ட்ஸ், அவர்கள் எல்லோரும் இந்த காரியத்திலிருந்து பற்ற வைக்கின்றனர், மேலும் ஆயிரக்கணக்கான மடங்கு, உலகத்தை சுற்றிலும் ஒரு பெரிய மகத்தான தேவனுடைய வல்லமையும், அசைவும் கொண்ட எழுப்புதல் புறப்பட்டுச் சென்றது. மேலும் பிசாசு அதை எதிர்கொள்வதற்காக, எல்லாவிதமான போலியான காரியங்களையும் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் உண்மையாகவே, உண்மையான தேவனுடைய வார்த்தை நேராக முடிவுவரைச் செல்லும். அது ஒருபோதும் தவறிப் போகாதே! “கர்த்தராகிய நான் அதை நட்டிருக்கிறேன். என்னுடைய கரத்திலிருந்து எவரும் அதைப் பிடுங்கிக்கொள்ளாதபடி நான் அதற்கு இரவும் பகலும் நீர்ப்பாய்ச்சுவேன்.” 85 இப்பொழுது, இன்றிரவு, கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நான் உரிமை கோரினேன். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் அதைச் செய்வாரானால், அப்பொழுது நீங்கள்…நீங்கள் அதை விசுவாசித்தால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அவர் காட்சியில் வருகிறபோது, அப்பொழுது, அவரிடத்தில் கேளுங்கள். கிறிஸ்து இங்கே இந்த மேடையின் மேல் பிரசன்னமாவாரானால்! இதோ ஒரு சவால் உள்ளது. இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன், சரியாக இங்கே மேடையின்மேல் பிரசன்னமாவாரானால், அவர் பூமியின்மேல் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களை செய்வாரானால், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 86 அவரை நோக்கி பாருங்கள், எம்மாவுக்கு போகும் வழியிலே, எப்படியாய் அந்த பையன்கள், பிட்ட…அவர் அந்த அப்பத்தைப் பிட்டபோது, மற்றெந்த மனிதனும் செய்ய முடியாத ஒரு காரியத்தை அங்கே அவர் செய்தார். அது கிறிஸ்து மாத்திரமே செய்ய முடிந்த ஒரு காரியமாக இருந்தது. மேலும் அவர்கள் அதை அடையாளங் கண்டுகொண்டனர். 87 இப்பொழுது அவர் அதே காரியத்தை இங்கே செய்வாரானால், அது கிறிஸ்து மாத்திரமே செய்ய முடியும்; ஒரு போலியான காரியமல்ல, ஆனால் அவர் செய்த அதே காரியம்; அப்பொழுது நீங்கள் அவரை விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொண்டு, அவரில் விசுவாசங்கொண்டு, அவரை நேசித்து, அவரை சேவியுங்கள். 88 நான் உங்களுக்கு சொல்லட்டும், வெறுமனே சபையில் இப்பொழுது சேர்ந்து கொள்ள வேண்டாம். அது கிரியை செய்யாது. நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமான கிரியையல்ல; நீங்கள் கூறின ஏதோ ஒரு சிறு காரியமான, “பாருங்கள், நான் சத்தமிட்டேன். நான் அந்நிய பாஷைகளைப் பேசினேன். நான் இதை, அதை, அல்லது மற்றதை செய்தேன்” என்பதல்ல. உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் உண்மையாகவே, ஏதோ ஒரு காரியம் உங்களை மாற்ற வரும்போது, நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாகிறீர்கள்; நீங்கள் கிறிஸ்து இயேசு என்ற அந்த நபரை பெற்றுக் கொண்டீர்கள்; பழைய காரியங்கள் மரித்துப் போகும்போது, புதிய காரியங்கள் மீண்டும் பிறக்கின்றன; நீங்கள் செய்த அந்தத் தவறை, அந்தக் காரியங்களை நீங்கள் சரி செய்கிறீர்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் சத்துருக்களை நேசிக்கிறீர்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக நீங்கள் ஜெபம்பண்ணுகிறீர்கள்; அப்பொழுது நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். மரமானது அது கொடுக்கிற கனியினாலே அறியப்படுகிறது. 89 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் அந்த சகோதரியை இசை பேழையண்டை சென்று, மெதுவாக, “மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார், பரிவிரக்கங்கொள்ளும் இயேசு” என்ற பாடலை வாசிக்கும்படி கேட்டுக்கொள்ளப் போகிறேன். இப்பொழுது, வெளியே உள்ள நீங்கள், ஜெப அட்டை வைத்திருப்பவர்கள், வாசலுக்கு அருகில் நெருங்கி வாருங்கள், நாம் இன்னும் ஒரு நொடியில் தொடங்குவோம். நாம் ஜெபம் செய்வோமாக. 90 எங்களுடைய ஸ்தோத்திரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே. ஓ, என்னுடைய மோசமான குரலால், நான்கு மாதங்கள் பேசியதில், நான் என்னுடைய குரலில் மிகவும் சோர்வடைந்திருக்கிறேன். ஆனால் நீர் இப்பொழுது எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இங்கே பிரான்ஹாம் கூடாரத்திலே மற்றொரு மைல்கல் இருக்கும். இந்த கடைசி நாட்களிலே, நியாயத்தீர்ப்பின் நாளிலே இங்கே மற்றொரு சாட்சி எழும்பும். இன்றிரவு, உட்புறத்திலும் வெளியிலும் அநேகர் நின்றுகொண்டிருக்கின்றனர், அவர்களில் அநேகர், “இது உண்மையா அல்லது இது உண்மை இல்லையா?” என்று யோசித்துக்கொண்டும், அநேகர் சிந்தித்துக்கொண்டும் இருக்கின்றனர். 91 ஓ நித்திய ஸ்தோத்தரிக்கப்பட்ட பிதாவே, இங்கே பிரசன்னமாகி உம்முடைய வார்த்தையை உண்மையாக்குவதன் மூலம், உம்முடைய அன்பை நீர் எங்களுக்கு இப்பொழுது வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் உம்முடைய வார்த்தையைக் குறித்துப் பேசியிருக்கிறேன்; நீர் கிலெயோப்பா மற்றும் அவனுடைய நண்பனிடத்தில், எம்மாவுக்கு போகையில், நீர்தாமே, செய்தது போன்றே. மேலும் எங்களுடைய பாதையில், கர்த்தாவே, நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கையில், நீர் உம்முடைய வார்த்தையின் மூலமாக எங்களிடத்தில் பேசும். இப்பொழுது எங்கள் மத்தியில் வாரும்! ஓ மகத்தான கிறிஸ்துவே, எங்கள் மத்தியில் வாரும், உம்முடைய வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபியும், மேலும் இன்றிரவு உம்முடைய மெய்மையை இங்கு வெளிப்படுத்தும். நாங்கள் பாவிகள் என்றும், இந்த காரியங்களுக்கு பாத்திரமானவர்கள் அல்ல என்றும், பரிதாபமான தகுதியற்ற சிருஷ்டிகளாயிருக்கிறபடியால், நாங்கள் அறிக்கை செய்கிறோம் ஆனால் கர்த்தாவே, நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். கிருபையினாலே நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம், விசுவாசத்தின் மூலமாக, நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக, இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தாவே, இப்பொழுது எங்களை ஆசீர்வதியும். 92 நீர், “தீர்க்கதரிசி தன்னுடைய சொந்த நகரத்தில், தன்னுடைய சொந்த ஜனங்களுக்கு மத்தியில்” என்பதைக் குறித்து கூறினபோது, உம்முடைய வார்த்தை உண்மை என்பதை நான் அறிவேன். ஆனால், கர்த்தாவே, இந்த இரவு, நீர் ஜனங்களை கீழ்நோக்கிப் பார்த்து, பரிசுத்த ஆவியின் அசைவாடுதலினூடாக, இந்த நகரத்தில் இங்கே ஒரு விசை உம்மையே வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ நித்திய தேவனே, நாங்கள் உம்பேரில் காத்திருக்கையில் இப்பொழுது எங்களை ஆசீர்வதியும். உம்முடைய சிலுவையேற்றத்திற்கு முன்னர் நீர் செய்த காரியங்களைச் செய்யும், அப்பொழுது ஜெபர்ஸன்வில் முறையிடுவதற்கு ஒற்றைக் காரியமும் இல்லாமல் இருக்கும். ஆனால், அந்த நாளிலே அவர்கள் சாக்குப்போக்கு இல்லாமல் இருப்பார்கள் என்றும், நீர் உம்மையே வெளிப்படுத்தியிருக்கிறீர் என்றும் நாங்கள் அறிவோம். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். 93 [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.]…நான் ஜெபிக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்பதற்காக அல்ல. இல்லை, அது புற்றுநோய் அல்ல, ஏனென்றால் அவள் அதிலிருந்து குணமடைந்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு முதுகுத் தொல்லைக்காக நான் ஜெபிக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அது உண்மை. அது அவளுடைய முதுகிலுள்ள ஒரு தொல்லையாக இருக்கிறது. அது சரியா? இப்பொழுது அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது கவனியுங்கள். நான் அவளிடத்தில் சற்று நேரம் அதிகமாக பேசினால், ஒருகால் ஏதோ ஒரு காரியம் கூறப்படலாம். எனக்குத் தெரியாது. இப்பொழுது, உங்களுடைய தொல்லை என்ன என்பதைக் குறித்த ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. அது என்னவாயிருந்தது என்று இப்போது எனக்குத் தெரியாது. புரிகிறதா? ஆனால் ஒலிப்பதிவுக் கருவிகள் அதை பதிவு செய்தி ருக்கின்றன, அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். 94 நாம் இன்னும் ஒரு நிமிடம் பேசி, அவர் வேறு ஏதாவது காரியத்தை குறித்து என்னிடம் சொல்வாரா என்று பார்ப்போம். வரிசை முறையில் ஏதோவொரு காரியத்தோடு காணப்படுகின்ற ஒரு ஸ்திரீயை நான் பார்க்கிறேன்…அது மற்றொரு ஸ்திரீயாக உள்ளது, அவள் இவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். மேலும் அவள் ஏதோ ஒரு விதமான சங்கத்தில் அல்லது ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள், அது ஒரு விதமான…அது ஒரு மனநோய் பாதிப்பு ஸ்தலமாயுள்ளது. [அந்த சகோதரி “ஆம்” என்கிறாள்.—ஆசி.] அது இந்தியானாவில் உள்ள மாடிசன் ஆகும். [“அது உண்மை.”] அது—அது ஒரு—அது ஒரு—நீ ஜெபித்துக்கொள்ள விரும்புகிற ஒரு சகோதரி, அந்த சங்கத்தில் இருக்கிறாள். நீ உன்னுடைய முழு இருதயத்தோடும், உனக்குள்ள எல்லாவற்றோடும் விசுவாசித்தால், தேவன் உன்னுடைய முதுகை சுகமாக்கி உன்னைக் குணப்படுத்தி விடுவிப்பார். இப்பொழுது நீ அதை விசுவாசிக்கிறாயா? சரி, இங்கே வா. 95 அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் அந்த ஸ்திரீயை குணப்படுத்தி, அவளை சுகப்படுத்தும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த ஆசீர்வாதங்களை அவளுக்கு அருளும். தேவனுடைய இரக்கங்கள் அவள்மேல் தங்கியிருந்து, அவளை குணப்படுத்தி, உமக்கே மகிமை பெற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 96 நான் இதைக் கூறலாம். அங்கிருந்து வருகிறது ஒரு அதிர்வு ஒன்று உள்ளது, இங்கே பின்னால் வலப்பக்கமிருந்து வருகிறது. அப்படியே ஒரு நொடி, அங்கேயே அப்படியே ஒரு நிமிடம் நில். அந்த ஒளி உன்னை விட்டுச் சென்றதை நான் கவனித்தேன். இங்கே என்னைச் சுற்றிலும் மிக அதிகமான, மிக அதிகமான கூட்டமிருக்கிறது. ஒவ்வொருவரும் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உன்னிடத்திற்கு நகருவதை நான் காண்கிறேன். அது யாரோ ஒருவர்…உங்களுக்கு—உங்களுக்கு ஸ்திரீகளுக்கான ஒரு அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. அது உண்மை. நான் இரண்டு அல்லது மூன்று பேர் பிரசன்னமாகிறதைக் கண்டேன், அது வெளிச்சம் பின்னாக திரும்பி அங்கே பின்னால் நின்று கொண்டிருக்கிற அந்த நபர் மீது பட்டது. அவர்கள் அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். புரிகிறதா? அது உண்மை. நீங்கள் பெற்றுள்ளது, அது ஸ்திரீகளுக்கான ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ள ஒரு பெண்மணியை குறித்த ஒரு நிலையாகும். அது உண்மை. இப்பொழுது போய் உன்னுடைய சுகமளித்தலை பெற்றுக்கொள், தேவனாகிய கர்த்தர் உன்னை சுகமாக்கிவிட்டார். ஆமென். 97 நீங்கள் வருவீர்களா? பெண்மணியே, நீங்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம், ஐயா” என்கிறாள்.—ஆசி.] அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, உங்களை அறிந்துகொள்ள, எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சுற்றிலுமுள்ள இடத்திலிருந்து வந்திருந்தால் நான் உங்களை பார்த்திருக்கலாம். எனக்குத் தெரியாது. ஜனங்கள் வந்து போகிறார்கள், நான் அதை போதியளவு அறிந்துகொள்வதற்கு இங்கே கூடாரத்தில் இருப்பதில்லை. ஆனால், நீங்கள், நீங்கள் நகரத்திலிருந்து வருகிறீர்களா? [“ஆம்.”] நீ நகரத்திலிருந்து வந்திருக்கிறாய். சரி, அப்படியானால், ஆனால் எனக்கு உன்னைத் தெரியாது. ஆனால் கிறிஸ்து உன்னை அறிந்திருக்கிறார். ஆனால் இங்கே எதற்காக, நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை, அவர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்றும், அதற்கான எந்த எண்ணமும் எனக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஒரே காரியம், நீங்கள் என்னை நகரத்தை சுற்றி அல்லது ஏதேனும் ஒன்றை, அல்லது, அல்லது ஏதேனும் ஒன்றைப் பார்த்திருக்கலாம். எனக்குத் தெரியாது. அதை அறிந்திருப்பது—தேவனைப் பொறுத்ததாகும். 98 அங்கே பின்னால் வலப்பக்கம், உங்களுக்கு இருந்து வருகிற குடல் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட விரும்புகிறீர்களா? கர்த்தராகிய இயேசு உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால், உங்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 99 அங்கே பின்னால் உட்கார்ந்தி ருக்கிற, இன்னொருவருக்கு ஒரு மோசமான இரத்த எண்ணிக்கை உள்ளது, நான் அவர்கள் பரிசோதிப்பதைக் கண்டேன். கர்த்தர் உங்களை குணப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவன் உங்களை அப்பொழுதே சுகமாக்கிவிட்டார். நீங்கள் அவரைத் தொட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் என்னைத் தொடவில்லை, நீங்கள் என்னிடத்திலிருந்து முப்பது அடி தூரத்தில் இருக்கிறீர்கள். ஆமென். 100 இப்பொழுது அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது வரிசையானது நகர்ந்துகொண்டிருக்கையில், அப்படியே நோக்கிப் பார்த்து, பிழையுங்கள். ஓ, இது இங்கே ஜெபர்ஸன்வில்லில் மிகவும் கடினமாக உள்ளதே! பார்த்தீர்களா? மேலும் உங்களை சுற்றிலும் உள்ள யாவருமே இந்தவிதமான ஒரு கூட்டமாயுள்ளனர், ஒவ்வொருவருமே! இயேசு ஒரு மனிதனின் கையைப் பிடித்து, ஒருமுறை, அவனை நகரத்திற்கு வெளியே அழைத்துச் சென்றார். 101 இப்பொழுது இந்த ஒரு வழியாக நோக்கி பாருங்கள், சகோதரியே, அப்படியே ஒரு நொடி. கர்த்தராகிய இயேசு உங்களுக்கு அனுகூலமான துணை என்று விசுவாசியுங்கள். நீங்கள் மலக்குடலில் உள்ள பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருக்கிறீர்கள், மேலும் ஒரு மருத்துவர் உங்களைப் பரிசோதித்திருக்கிறார். [அந்த சகோதரி, “ஆம்” என்கிறாரள்.—ஆசி.] அது “மூல நோயாக” இருந்தது என்று அவர் உங்களிடம் கூறினார். நீங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பதையும் கூட நான் காண்கிறேன், நீங்கள் உண்மையாகவே மெதுவாக சென்றுகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மூட்டுவீக்கம் உள்ளது. [“அது உண்மை.”] அது கர்த்தர் உரைக்கிறதாவதாக உள்ளது. உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அது முற்றிலும் உண்மையே. மேலும் நான் அவருடைய அலுவலகத்திலே அங்கே அந்த சிறிய அட்டையில் அவருடைய கையொப்பத்தைக் கண்டேன்: ரெபேக்கா பேக்கர். [“ஆம் ஐயா.”] 509 கிரஹாம் தெரு. [“அது உண்மை.”] அது முற்றிலும் உண்மை. அது அவருடைய அலுவலகத்திலுள்ள, பதிவேட்டில் உள்ளது. அது உண்மை. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம், ஐயா.”] அப்படியானால் நீங்கள் உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த ஸ்திரீ அவளுடைய சுகமளித்தலை பெற்றுக்கொள்வாளாக. ஆமென். பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. போய் இப்பொழுதே விசுவாசி. தேவனில் விசுவாசமாயிரு. நீங்கள் மாத்திரம் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிந்தால் நலமாயிருக்குமே! 102 இப்பொழுது அந்தப் பெண்மணி இங்கே நிற்கிறாள், அதாவது நீங்கள்…என்னைப் பொறுத்தமட்டில், எனக்கு உங்களைத் தெரியாது. உங்களுக்கு என்னைத் தெரியாது, எனக்கு உங்களைத் தெரியாது. அது சரிதானே? சரி. அப்படியானால் என்னைத் தெரியாத யாரோ ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள், மேலும் எனக்கு அவர்களைத் தெரியாது. எனக்கு அந்த மற்றொரு பெண்மணியையும் தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரையில், இந்தப் பெண்மணி முற்றிலும் ஒரு அந்நியராய் இருக்கிறாள். அது உண்மையானால், பெண்மணியே, உன்னுடைய கரத்தை உயர்த்து. வாழ்க்கையில் இதுவே, நம்முடைய முதல் முறையான சந்திப்பு. 103 இதோ ஒரு ஸ்திரீயும் ஒரு மனிதனும் இருக்கிறார்கள். பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரத்தின் ஒரு அழகான காட்சி, அங்கே ஒரு ஸ்திரீயும் ஒரு மனிதனும் சந்தித்தனர்; அந்த ஸ்திரீ ஒரு சமாரியராயிருந்தாள், இயேசு ஒரு யூதனாயிருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசத் துவங்கினர், மேலும் இயேசு அவளுடைய இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தி அவளுடைய தொல்லை என்னவாயிருந்தது என்பதை அவள் அறிந்துகொள்ளும்படிச் செய்தார். இப்பொழுது, அவர் இன்றைக்கு அதே இயேசுவாயிருப்பாரானால், அவர் இன்றைக்கும் அதே கிரியையை செய்ய முடியும். 104 இந்த ஸ்திரீ அவளுடைய கரத்தை தேவனண்டை உயர்த்துவாளானால், சத்தியம் செய்வதற்கு அல்ல (ஏனென்றால், நாம் அதைச் செய்வதில் நம்பிக்கை கொள்வதில்லை), நாங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் ஒருவரை ஒருவர் கண்டதில்லை என்று அவளுடைய கரத்தை உத்தமத்தோடு, என்னோடு, உயர்த்தியிருப்பாளானால், மேலும் ஒருவருக்கொருவரைப் பற்றி ஒன்றுமே தெரியாது. பெண்மணியே, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? அதுதான் உங்கள் காரியமாள்ளது. அவள் என்னை ஒருபோதும் கண்டதில்லை, அல்லது நான் அவளை ஒருபோதும் கண்டதில்லை, மேலும் அவள் முற்றிலும் ஒரு அந்நியராயிருக்கிறாள். இப்பொழுது அங்கே… 105 கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னம் இங்கே உள்ளது. இந்த ஸ்திரீ சுகவீனமாயிருப்பாளானால், என்னால் அவளைக் குணப்படுத்த முடியாது. அவள் ஏற்கனவே சுகமாக்கப்பட்டிருக்கிறாள்; கிறிஸ்து அவளுக்காக மரித்தபோதே, அவர் அவளை சுகப்படுத்திவிட்டார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆனால் அவர் இங்கே இப்பொழுது நின்றுகொண்டிருப்பாரானால், மேலும்—மேலும் நான் நின்றுகொண்டிருக்கிற இடத்தில், அவர், அவளுக்கு அவர் வெளிப்படுத்த முடியும், அல்லது அவளுடைய விசுவாசத்தை தகுதிப்படுத்த அவளுக்கு ஏதோ ஒன்றை கொண்டு வரும்படி செய்யலாம்! இப்பொழுது, அவள் இங்கே பணத் தொல்லைக்காக நின்றுகொண்டிருக்கலாம். அவள் இங்கே வீட்டு பிரச்சனையில் நின்றுகொண்டிருக்கலாம். அவள் ஒரு புற்று நோயினால் மரித்துக் கொண்டிருப்பதற்காக, இங்கே நின்றுகொண்டிருக்கலாம். அவள் காசநோயோடு இங்கே நின்றுகொண்டிருக்கலாம். எனக்குத் தெரியாது. என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது. 106 இப்பொழுது நீங்கள் உங்களையே என்னுடைய ஸ்தானத்தில் வைக்க விரும்பினால், இங்கே வந்து என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். [சகோதரன் பிரான்ஹாம் நிறுத்துகிறார்—ஆசி.] நிச்சயமாகவே. எனக்கும் தெரியாது. நானும் செய்யமாட்டேன். ஆனால் பரலோகத்தின் தேவன் அறிந்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] 107 கிறிஸ்து அதே காரியத்தை இங்கே செய்தால், பிழையற்ற உண்மையாய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளது போன்றேயிருக்கும், கிணற்றண்டையிலே அந்த ஸ்திரீயினிடத்தில் பேசின மாறாத இயேசுவாய் அவர் இருக்கிறார் என்று நிரூபித்தார், இங்குள்ள எத்தனை பேர், “நான் அவரை இப்பொழுதே என்னுடைய சுகமளிப்பவராக அல்லது எனக்கு என்ன தேவையாயிருந்தாலும் பெற்றுக் கொள்வேன்” என்று கூறுவீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, “அவர் அதைச் செய்வாரானால், நான் அவரை ஏற்றுக்கொள்வேன்” என்று கூறுங்கள். 108 கரங்களை மேலே உயர்த்தினப் பெண், நாம் ஒருபோதும் சந்தித்ததேயில்லை. கர்த்தர் அதை அருள்வாராக என்பதே, என்னுடைய ஜெபமாய் உள்ளது. இப்போது இந்த பெண்மணி என்னிடத்திலிருந்து நகர்வதுபோல தென்படுகிறது; கூட்டத்தார் என்னுடைய சத்தத்தைக் கேட்க முடிந்தால் நலமாயிருக்குமே. யாரோ ஒருவர் நிற்கிறதை நான் காண்கிறேன். அது அதிகபட்சம், அவளுக்காக அல்ல. அவள் வேறு யாரோ ஒருவருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாள், மேலும் அது ஒரு வயோதிகப் பெண்மணி. அது அவளுடைய தாய், அவளுக்காக இவள் ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அது உண்மை. அவளுக்கு சிறு மாரடைப்புகள் ஏற்பட்டு, சிறு இருதயத் துடிப்புகள் போன்றவையும் உள்ளன. அவளால் இரவிலே தூங்கமுடியவில்லை. அது சரிதானே? அது உண்மையானால் உன்னுடைய கரத்தை உயர்த்து. அந்தப் பெண்மணி இந்த தேசத்திலிருந்து வரவில்லை. அந்தப் பெண்மணி இங்கிருந்து தொலைவில் இருக்கிறாள். அந்தப் பெண்மணி ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறாள். அது முற்றிலும் உண்மை. நீங்கள் ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய கண்ணுக்கும் கூட ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்களுக்கு உங்களுடைய கண்கள் குருடாகிக்கொண்டே செல்கின்றன. அது உண்மை. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. 109 இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். நான் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கையில், அங்கே உங்களுக்காக ஜெபியுங்கள், தேவனை விசுவாசியுங்கள். அவர் இங்கிருக்கிறார், சர்வவியாபியானவர். சகோதரியே, இங்கே வாருங்கள். 110 ஸ்தோத்திரிக்கப்பட்ட இரட்சகரே, நீர் இந்த ஸ்திரீக்கு அவளுடைய வாஞ்சையை அருள வேண்டும் என்று, நான் கிறிஸ்துவினுடைய நாமத்தில், ஜெபிக்கிறேன். சர்வவல்ல தேவனுடைய வல்லமை அவள் மீது தங்கியிருப்பதாக, அவள் சுகமடைந்து, அவள் கேட்டுக்கொண்டதை எப்போதும் பெற்றுக்கொள்வாளாக. நான் இந்த ஆசீர்வாதத்தை இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 111 இப்பொழுது போய், களிகூர்ந்து, மகிழ்ச்சியாயிரு. சகோதரியே, விசுவாசி, சுகமடைவாய். சரி. 112 எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, ஆனால் எனக்கு இந்த ஸ்திரீயை தெரியும் என்று நான் நம்புகிறேன். நீ ஜார்ஜ்டவுனிலிருந்து வருகிறாய் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் நான்…நீ சகோதரன் ஆர்கன்பிரைட்டினுடைய உறவுக்காரர் அல்லவா? நிச்சயமாக, இப்பொழுது இது அபிஷேகம், இது வித்தியாசமானது. இப்பொழுது ஒரு வித்தியாசம் உள்ளது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நான் வேறுறெங்காவது உங்களிடத்தில் பேசும்போது; அது இப்போது வித்தியாசமாக உள்ளது. நீங்கள் உண்மையாகவே ஒரு இனிமையான உணர்வை போன்று, உணர்ந்தீர்கள். அது பரிசுத்த ஆவி. நீங்கள் இங்கே உங்களுக்காக இல்லை. நீங்கள் இங்கு வேறு யாரோ ஒருவருக்காக இருக்கிறீர்கள், அது கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து வயதுடைய ஒரு சிறு பெண். அவளுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது, அவள் வடக்கு இந்தியானாவில் வசிக்கிறாள். அது உண்மை. நீங்கள் உங்களுடைய கையில் வைத்துள்ளதை, அதை அவளிடத்துக்கு அனுப்புங்கள், அவள் சுகமடைவாள். இப்பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்து, கிறிஸ்துவினுடைய நாமத்தில், நீங்கள் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக்கொள்ளுங்கள். “நீ விசுவாசிக்க கூடுமானால், யாவும் கூடும்!” 113 இங்கே எனக்கு அந்நியரான ஒரு பெண்மணி இருக்கிறாள். எனக்கு உன்னைத் தெரியாது, என்னுடைய வாழ்க்கையில் நான் உன்னை ஒருபோதும் கண்டதேயில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம், பல வருடங்கள் இடைவெளி உண்டு; ஒருவேளை அநேக, அநேக மைல்கள் இடைவெளியில் பிறந்திருக்கலாம். எனக்கு உன்னைத் தெரியாது, நான் உன்னை ஒருபோதும் கண்டதில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து உங்களை அறிந்திருக்கிறார். 114 கூட்டத்தாரிடத்தில் ஏதோ ஒன்று சம்பவித்தது; ஒரு மனிதன் எனக்கருகில் தோன்றினான். இதோ அவன், இங்கே, தொப்புள் வெடித்து அமர்ந்திருக்கிறான். ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆம்” என்கிறார்.—ஆசி.] அப்படியானால் கிறிஸ்து உங்களை குணப்படுத்தி உங்களை சுகப்படுத்துகிறார்! ஆமென். 115 அதுவே அதை செய்வதற்கான வழியாய் உள்ளது, விசுவாசியுங்கள்! அவர் எதைத் தொட்டார்? நான் அந்த மனிதனை ஒருபோதும் கண்டதில்லை; ஆனால் அவர் அங்கே குணமாக்கப்பட்டார். அவர் இங்கே பிரசன்னமாயிருக்கிற கர்த்தராகிய இயேசுவைத் தொட்டார். உங்களிடத்திலிருந்து அந்த அவிசுவாசத்தை அகற்றுங்கள்! நான் வில்லியம் பிரான்ஹாமாயிருப்பதைக் குறித்து மறந்துவிடுங்கள். இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள், அவர்தான் இங்கிருக்கிறார். என்னைக் குறித்து மறந்துவிடும்படி, கிறிஸ்துவின் நாமத்தில், நான் உங்கள் விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன்; மேலும் இந்த கர்த்தராகிய இயேசு இங்கே இருக்கிறார் என்று விசுவாசித்து, என்ன சம்பவிக்கும் என்று பாருங்கள். நீங்கள் இந்த கட்டிடத்தில் எங்கிருந்தாலும் எனக்கு கவலையில்லை. 116 இப்பொழுது இங்கே ஒரு சிறு பெண்மணி இருக்கிறாள். நான் அவளை ஒருபோதும் கண்டதில்லை. அவள் என்னைவிட மூத்தவள். அவள் யார் என்றும், அவள் எங்கிருந்து வருகிறாள் என்றும், அவளைக் குறித்து ஒன்றுமே எனக்குத் தெரியாது. நான் அவளுக்கு முற்றிலும் ஒரு அந்நியனாயிருக்கிறேன். ஆனால் கிறிஸ்து அவளை அறிந்திருக்கிறார். 117 நீ எதற்காக இங்கேயிருக்கிறாய் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீ அதை ஏற்றுக்கொண்டு அதை விசுவாசிப்பாயா? [அந்த சகோதரி, “நிச்சயமாக” என்கிறாள்.—ஆசி.] நான் ஏதோ ஒரு காரியத்தை பேசினபோது, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு உனக்கு ஒரு வினோதமான உணர்வு உண்டாயிருந்தது, உனக்கு உண்டாகவில்லையா? அது உன்னுடைய சகோதரி [“ஆம்.”] இந்தியானாவிலுள்ள, மாடிசனில் உள்ள பைத்தியக்கார பராமரிப்பு நிலையத்தில் இருப்பதாகும். [“அது உண்மை.”] அது சரி. ஏனென்றால், மற்றொரு ஸ்திரீ இங்கே நின்றுகொண்டிருந்தாள், நீ அங்கே நின்றுகொண்டு இந்த வழியாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாய். அந்த தரிசனம், நீ மேலே வந்தபோது நீ விசுவாசித்து கொண்டிருந்தாய். [“நிச்சயமாக.”] அது முற்றிலும் உண்மை. அதைத்தான் அது செய்தது. இன்றிரவு நீ இங்கே இருப்பதற்கான காரணம், உனக்கும் ஒரு இருதய கோளாறு ஏற்பட்டுள்ளது. உனக்கு சற்று முன்னர் ஒரு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. அது முற்றிலும் உண்மை. [“அது உண்மை.”] மேலும் நான் இப்பொழுது காண்கிறேன், நான் ஒரு தரிசனத்தில் நோக்கி பார்க்கும் போது, அது உருளும் நிலமாயிருக்கிறது. நீ இங்கு எங்கோ தெற்கு இந்தியானாவிலிருந்து வருகிறாய். நீ கோரிடனுக்கு அருகிலிருந்து வருகிறாய், அங்கிருந்துதான் நீ வருகிறாய். வீட்டுக்குத் திரும்பி போ, நீ சுகமாக இருக்கிறாய். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். அது பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது என்பதாகும். 118 விசுவாசமாயிருங்கள், விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். கர்த்தராகிய இயேசுவின் சர்வ வல்லமையை நீங்கள் அடையாளங் கண்டுகொள்கிறீர்களா? எவ்வளவு அற்புதமானது! காரியம் என்ன? 119 இங்கே இந்த மூலையில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன். அது புற்று நோயா அல்லது காச நோயா என்று மருத்துவருக்குத் தெரியவில்லை. [அந்த நபர், “அது உண்மை” என்று கூறுகிறார்.—ஆசி.] அது உண்மை. ஆனால் நீ அதை விசுவாசிப்பாயானால், நீ எப்படியும் சுகமடைவாய். உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்துள்ளது. போ. 120 அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. ஜீவனுள்ள தேவனின் சர்வ வல்லமை! நான் உங்களுடைய விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். “நீங்கள் விசுவாசிக்க கூடுமானால்!” இப்பொழுது, அவர் மரித்தோரிலிருந்து எழுந்துள்ளார். அவர் இங்கே நம்மோடிருக்கிறார். அது அவராயுள்ளதே! அவை அவர் பூமியில் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களாயிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன, அவர் இன்னமும் உயிரோடிருக்கிறார், அவர் சதாகாலமும் உயிரோடிருக்கிறார். அப்படியே விசுவாசியுங்கள், விசுவாசமுடையவர்களாயிருங்கள். 121 பெண்மணியே, எனக்கு உன்னைத் தெரியாது. என்னுடைய வாழ்க்கையில் நான் உன்னை ஒருபோதும் கண்டதில்லை, உன்னைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அது உண்மை, அப்படித்தானே? இயேசுகிறிஸ்து உங்களை அறிந்திருக்கிறார். நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா, என்னை அவருடைய தீர்க்கதரிசியாக விசுவாசிப்பீர்களா? அவர் அதைச் செய்வாரானால், ஏதோ ஒன்று என்னை அபிஷேகித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் இது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நான், “என்னுடைய கரங்களை உங்கள் மீது நான் வைக்கப் போகிறேன், சுகமடையுங்கள்,” என்று கூறியிருந்தால், நீங்கள் அதை சந்தேகிக்க உங்களுக்கு ஒரு உரிமை உண்டு. ஆனால் உனக்கு உண்மையாக தெரிந்த ஒன்றை தேவன் என்னிடத்தில் கூறுவாரானால், அப்பொழுது அது உண்மையா அல்லது இல்லையா என்பதை நீ அறிந்துகொள்வாய். அது உண்மைதானே? [அந்த சகோதரி, “அது உண்மை” என்கிறாள்.—ஆசி.] அது ஒரு ஸ்திரீகளுக்கான கோளாறு. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உங்களுடைய முகத்தின் மேல் ஏதோ வெண்மையாக இருப்பதோடு, நீங்கள் அறுவை சிகிச்சை மேஜையிலிருந்து வெளியே வருவதை நான் காண்கிறேன், ஆனால் அது வெற்றிகரமாக இருக்கவில்லை. அது உண்மை. ஆனால், அந்தப் பிசாசு மருத்துவரிடத்திலிருந்து மறைந்துகொண்டான், ஆனால் அது தேவனிடத்திலிருந்து மறைந்துகொள்ள முடியாது. பெண்மணியே, வீட்டிற்குச் சென்று, குணமாகுங்கள், இயேசுகிறிஸ்து உங்களை குணப்படுத்தி உங்களை சுகப்படுத்தியிருக்கிறார். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் நலமாயிருக்குமே! 122 பெண்மணியே, நான் உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்து, இங்கே இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அவர் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? ஏனென்றால் தேவன் சுகப்படுத்துவதற்கு, நீரழிவு என்பது ஒன்றுமேயில்லை. அவர் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் வீட்டுக்கு சென்று உன்னுடைய சுகமளித்தலை தேவனுடைய குமாரனாகிய, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஏற்றுக்கொள். ஆமென். பெண்மணியே, இங்கே வா. நீ விசுவாசிக்கிறாயா? 123 இப்பொழுது அங்கே பின்னால் அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்! இது ஒரு “மனோவசியம்” அல்ல. நீங்கள் இப்பொழுது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது! நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். 124 எனக்கு இந்த ஸ்திரீயைத் தெரியாது. பெண்மணியே, உங்களுடைய கரங்களை என் மீது வையுங்கள். உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் வெளிப்படுத்துவாரானால்! நான் இந்த வழியாக நோக்கிப்பார்க்கிறேன், நான் உங்களுடைய மனதை வசீகரித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருக்கிறார் என்றும், நான் அவருடைய ஊழியக்காரன் என்றும் நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். உங்களுக்கு ஒரு ஸ்திரீகளுக்கான கோளாறு, ஒரு பெண்களுக்கான கோளாறு உள்ளது. அது உண்மை. உங்களுக்கு இருந்தது; இப்பொழுது உங்களுக்கு அது இல்லை. நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள். உங்களுடைய சாலையிலே, களிகூர்ந்துகொண்டே சந்தோஷமாய் செல்லுங்கள். 125 ஐயா, வாருங்கள். அந்த பழைய சிறுநீரக பிரச்சனை, மேலும் ஏதோ ஒன்று உங்களை தொந்தரவு செய்கிறது. தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆம்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் அதிலிருந்து சுகமாவீர்களா? அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொண்டு, உங்களுடைய சாலையில் களிகூர்ந்துகொண்டே, செல்லுங்கள். ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசியுங்கள்! 126 பெண்மணியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் முன்பு போல சென்று, ஒரு நல்ல ஆகாரத்தை மீண்டும் புசிக்க விரும்பமாட்டீர்களா? நீங்கள் முழுவதும் பதட்டமாய் இருந்து வருகிறீர்கள், நீங்கள் அவ்வாறு இருந்திருக்கவில்லையா? அது உங்களுடைய வயிற்றில் ஒரு வயிற்றுப் புண் ஏற்பட காரணமாயிற்று. போய், நீங்கள் ஒரு இறைச்சி கலந்த ரொட்டியை வாங்கி, அதைப் புசியுங்கள், இயேசுகிறிஸ்து உங்களை சுகமாக்கியிருக்கிறார். நீங்கள் உங்களுடைய சாலையில் களிகூர்ந்துகொண்டே, செல்லுங்கள். 127 “நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால்!” தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஜீவனுள்ள, சர்வ வல்லமையுள்ள கிறிஸ்து, இங்கிருக்கின்ற ஒவ்வொரு நபரையும் குணப்படுத்த, இப்பொழுது இங்கே இருக்கிறார். 128 அப்படியே ஒரு கணம். பின்னால் உள்ள கீழ் வரிசையில், ஒரு வாலிபன் உட்கார்ந்திருக்கிறான், இங்கே கீழே உட்கார்ந்திருக்கிறான். மகனே, உனக்கு இருந்ததாக நீ நினைத்திருந்ததைவிட உன்னுடைய விசுவாசம் பெரியதாயிருக்கிறது. உனக்கு ஒரு இருதயக் கோளாறு இருந்தது, உனக்கு இருந்ததல்லவா? அது உண்மையானால், உன்னுடைய காலூன்றி எழும்பி நில். மகனே, இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கிவிட்டார். நீ சுகமாக இருக்கிறாய். உன்னுடைய சாலையிலே போய், சுகமாயிரு. 129 நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 130 எனக்கு தெரியாத ஒரு மனிதன் இங்கே இருக்கிறார். நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். இந்த மனிதன் இந்தக் காலை ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் உன்னை எனக்குத் தெரியாது, உன்னைக் குறித்து எந்த எண்ணமும் எனக்கு இல்லை. அது சரிதானே? நீ எதற்காக இங்கே இருக்கிறாய் என்பதை இயேசு கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீ அதை ஏற்றுக்கொள்வாயா? 131 கூட்டத்தில் எத்தனை பேர் அதை இப்போதே ஏற்றுக்கொள்வீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்!” விசுவாசமுடையவர்களாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். 132 இந்த மனிதனுக்கு ஒரு தோல்வியாதிப் பிரச்சினை உள்ளது. அது உண்மை. மேலும் நான் உன்னைக்…காண்கிறேன். அது ஒரு முழு சோர்வடைந்த நிலையான பிரச்சினையாயுங் கூட உள்ளது. அது உண்மை. அது உண்மையானால், உன்னுடைய கரத்தை அசைத்துக் காட்டு. உனக்கும் ஒரு ஸ்திரீக்கும் இடையே கருப்பான ஏதோவொன்று நிற்பதை நான் காண்கிறேன்; அது உன்னுடைய மனைவி. நீ அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அவள் ஒரு பாவியாய் இருக்கிறாள், மேலும் அவள் ஒரு கிறிஸ்தவளாக வேண்டும் என்று நீ விரும்புகிறாய். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அது உண்மை. போய், உன்னுடைய கரங்களை அவள் மீது வைத்து, அவளுக்காக ஜெபி, பரலோகத்திலுள்ள தேவன் இந்த உண்மையான காரியங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவார். 133 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் அதை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்!” நான் உங்களுடைய விசுவாசத்திற்கு சவாலிடுகிறேன். பின்பக்கமாக பின்னால், நீங்கள் எங்கேயிருந்தாலும், நோக்கிப் பார்த்துப் பிழையுங்கள்! நீங்கள் எங்கேயிருந்தாலும், தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். “நீங்கள் விசுவாசிக்க கூடுமானால், யாவும் கைகூடும்.” உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்! கவனியுங்கள். இந்த வழியாக நோக்கிப் பாருங்கள். ஜெபியுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் நிறுத்துகிறார்—ஆசி.] நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எதை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கலாம். 134 ரெபெக்காள், தேனே, இந்த வழியில் கொஞ்சம் திரும்பி வா. நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே நில். இது என்னுடைய குட்டிப் பெண், என்றாவது ஒருநாள் அவளும் கூட, ஒரு தீர்க்கதரிசினியாய் இருப்பாள். தேனே, வெள்ளைத் தொப்பியுடன், உனக்கு பக்கத்தில் அங்கே நின்றுகொண்டிருக்கிற அந்தப் பெண்மணி, அவள் ஒரு எலும்பு உட்புழை தொல்லையினால் அவதியுற்றுகொண்டிருக்கிறாள். பெண்மணியே, உன்னுடைய கரத்தை உயர்த்து, அல்லது உன்னுடைய காலூன்றி எழும்பி நில். தேவன் அழைக்கவேண்டும் என்று நீ ஜெபித்துக் கொண்டிருக்கிறாய், நான் உன்னை அழைக்கட்டும். அது சரிதானே? என்னுடைய சிறு பெண் அவளுடைய கரங்களை அங்கே உன் மீது வைக்கட்டும். ஓ நித்திய தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அந்த ஸ்திரீயை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிற அந்த பிசாசை நான் கடிந்துகொள்கிறேன். கிறிஸ்துவினுடைய நாமத்தில், அது அகன்று போகட்டும். ஆமென். 135 ஓ, கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! கர்த்தராகிய இயேசு தம்மையும் கூட, வெளிப்படுத்துவாராக. அவர் இங்கு இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்படியானால் நான் உங்களுக்கு சொல்லட்டும், நீங்கள் ஒவ்வொருவரும், இப்பொழுதே, நீங்கள் அதை விசுவாசிக்க கூடுமானால், இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும், இப்பொழுதே சுகமாக்குகிறார். என்னுடைய வார்த்தைகள் இங்கே உண்மையாயிருக்குமானால், அது அங்கேயும் உண்மையாயிருக்கும். நீங்கள் செய்யும்படி நான் என்ன சொல்லுகிறேனோ அதை நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுதே சுகமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.] அப்படியானால் உங்களுடைய கரங்களை ஒருவர் இன்னொருவர் மீது வையுங்கள். உள்ளேயும் வெளியேயுமுள்ளவர்கள் அப்படியே உங்களுடைய கரங்களை ஒருவர் இன்னொருவர் மேல் வையுங்கள். நீங்கள் சந்தேகப்படாதீர்கள்! ஒரு செவிட்டு ஆவி வெளியேறுவதை நான் கேட்டேன். இங்கே அவர், உயிர்த்தெழுந்த கிறிஸ்து இருக்கிறாரே! 136 ஓ நித்தியமான ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நான் ஒவ்வொரு அசுத்த ஆவிக்கும் சவாலிடுகிறேன், கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தில் அது இந்த இடத்தை விட்டுப் போவதாக, இந்த ஜனங்களை விட்டு வெளியே செல்வதாக. மகத்தான பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது, விசுவாசிக்கும்படியான மகத்தான விசுவாசத்தோடு, இங்குள்ள ஒவ்வொருவரையும் அபிஷேகிப்பாராக. 137 ஓ, சாத்தானே, பிசாசாகிய நீ, நீண்ட காலமாக எங்களை பொய்யுரைத்து ஏமாற்றியிருக்கிறாய். கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டார், மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்கள் அவர்மேல் தொங்கிக்கொண்டிருப்பதோடு அவர் இங்கே நின்றுகொண்டிருக்கிறார். சுகமளிக்கும் வல்லமை செலுத்தப்பட்டிருக்கிறது. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், இந்த ஜனங்களிடத்திலிருந்து விலகிச் செல்லும்படி நாங்கள் உனக்குக் கட்டளையிடுகிறோம். அவர்கள் போய் சுகமாயிருக்கும்படி, சாத்தானே, அவர்களை விட்டு வெளியே வா. 138 இயேசுகிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட்டார் என்று நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், உங்களுடைய காலூன்றி எழும்பி நின்று, சர்வவல்லமையுள்ள தேவனின் தெய்வீக கமளிக்கும் வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் இது! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நீங்கள், ஒவ்வொருவரும், சுகமடைந்துவிட்டீர்கள். உங்களுடைய காலூன்றி எழுந்து நின்று, தேவனுக்கு துதி செலுத்துங்கள்! ஆமென்! கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கபடுவதாக! நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிக்கையில், நாம் அவருக்குத் துதியை செலுத்துவோமாக. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனுக்கே ஸ்தோத்திரம்! ஆமென்!